25 ஆண்டுகள் பழமையான திருமண ஆடையை அணிந்து நடித்த கரீனா

  Newstm Desk   | Last Modified : 04 Jun, 2018 01:03 pm

kareena-kapoor-lehenga-in-veere-di-wedding-is-25-years-old

வீரே தி வெட்டிங் படத்தில் கரீனா கபூன் கான் அணிந்த 25 வருடங்கள் பழமையான திருமண உடை அனைவரையும்  கவர்ந்துள்ளது. 
குழந்தை பெற்ற பிறகு கரீனா கபூர் கான், திருமணம் முடிந்த சோனம் கபூர் நடித்திருக்கும் படம் வீரே தி வெட்டிங். இந்த படத்தில் ஸ்வரா பாஸ்கரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 
2 ஆண்டுகளுக்கு பிறகு கரீனா நடித்த படம் வெளியாகி இருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர். சஷான்ஷா கோஸ் இயக்கி உள்ள இந்த படத்திற் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும் பாகிஸ்தானில் இந்த படம் தடை செய்யப்பட்டது. 
இருந்தும் உலகம் முழுவதும் இந்த படம் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கரீனா கபூர் அணிந்திருந்த திருமண உடை அனைவரையும் கவர்ந்துள்ளது. அபு ஜானி சந்தீப் கோஸ்லா வடிவமைத்த இந்த ஆடை 25 ஆண்டுகள் பழமையானதாம். அந்த உடையில் கரீனா இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close