அடுத்தது மோடிதான்... பாலிவுட்டில் தயாராகிறது படம்!

  திஷா   | Last Modified : 06 Jun, 2018 02:08 pm
paresh-rawal-to-play-pm-modi-in-a-biopic

பாலிவுட்டில் தற்போது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் டிரெண்ட் உருவாகியுள்ளது. இதில் நடிகர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையையை படமாக்க்குவதில் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். 

ஏற்கனவே கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் திரைப்படமாகி இருக்கின்றன. சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறான சச்சின்: ஏ பில்லியன் ட்ரீம்ஸும், தோனியின் எம்.எஸ்.தோனி: ஏ அன்டோல்ட் ஸ்டோரியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. 

சச்சின், தோனியைத் தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கையும் திரைப்படமாகத் தயாரிக்கப்பட இருக்கிறது. 

இந்தப் படங்களுக்கு முன்பே தடகள வீரர் 'பறக்கும் சீக்கியர்' என்றழைக்கப்பட்ட மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாறு பாக் மில்கா பாக் என்ற பெயரில் வெளியாகி 2013-ம் ஆண்டின் பாப்புலர் ஃபிலிம் என்ற கேட்டகரியில் தேசிய விருதையும் தட்டிச் சென்றது. 

தற்போது நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்ரை 'சஞ்சு' என்ற பெயரில் படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி. இதில் சஞ்சய் தத்தாக ரன்பீர் கபூர் நடித்திருக்கிறார். 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையும் தற்போது படமாகிக் கொண்டிருக்கிறது. இதில் மன்மோகனாக அனுபம் கெர் நடிக்கிறார். இந்த வரிசையில் பிரதமர் மோடியின் வாழ்க்கையும் படமாக இருக்கிறது. குஜராத்தில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி இன்று உலகின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தில் பா.ஜ.க தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதில், மோடியாக பா.ஜ.க எம்பியும் நடிகருமான பரேஷ் ராவலே நடிப்பதுடன், இவரே படத்தையும் தயாரிக்கிறார்.

சஞ்சு படத்தில் சஞ்சய் தத்தின் தந்தையாக பரேஷ் நடித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close