ஜான்வியை விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த அர்ஜுன் கபூர்!

  திஷா   | Last Modified : 08 Jun, 2018 09:07 pm

arjun-kapoor-opens-up-for-janhvi

போனி கபூரின் முதல் மனைவியின் மகன் அர்ஜுன் கபூர். ஸ்ரீதேவி உயிருடன் இருந்தவரையில், அவரைத் தனது சித்தியாக அர்ஜூன் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த குடும்பத்துடன் சரியாக உறவு முறையையும் அவர் பேணவில்லை. தனது தாயை விவாகரத்து செய்துவிட்டார் என்பதால் தந்தை போனி கபூர் மீதும் அர்ஜுனுக்கு கோபம் இருந்து வந்தது. ஆனால், இந்த மனக்கசப்புகள் எல்லாம் ஸ்ரீதேவி மறைவுக்குப் பின்னர் மாறிவிட்டது.
ஶ்ரீதேவியின் மகள்கள் ஜான்வியையும், குஷியையும் தனது தங்கைகளாக ஏற்றுக் கொண்டு, அவர்களை அரவணைத்து வருகிறார் அர்ஜுன். 
ஜான்வி சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை நெட்டிசன்கள் சிலர் மிக மோசமாக விமர்சனம் செய்திருந்தனர். குறிப்பாக அவர் அணிந்திருந்த ஆடையை கிண்டல் செய்திருந்தனர். இந்த விமர்சனத்தை பிரபல ஆங்கில நாளேடு ஒன்று செய்தியாக்கி வெளியிட்டது.

இதைக் கண்டு கொதித்த அர்ஜூன் கபூர், "இரண்டு பேர் செய்த விமர்சனம், ஒரு மிகப்பெரிய பத்திரிகையின் இணையதளத்தில் செய்தியாக வெளியாகியிருக்கிறது. விமர்சனங்களுக்கு ஊடகங்கள் அளிக்கும் முக்கியத்துவம் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. இதுபோன்ற மோசமான விமர்சனங்களைக் கவனித்து செய்தியாக்காமல் கடந்துசெல்வதே, அவற்றை மறக்கடிப்பதற்குச் சரியான வழி" என தனது பதிலடியைக் கொடுத்திருக்கிறார். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.