அக்‌ஷய் குமாருடன் கை கோர்க்கும் கணேஷ் வெங்கடராமன்!

  Bala   | Last Modified : 11 Jun, 2018 11:52 am

ganesh-venkatraman-join-with-akshai-kumar

நடிகர் கணேஷ் வெங்கட் ராமன், ஒரு விளம்பரப் படத்தின் மூலம் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருடன் கைகோர்த்துள்ளார். 

நடிகர் கணேஷ் வெங்கடராமன், சினிமாவைக் காட்டிலும் சின்னத்திரையில் வந்த ’பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலமாகத் தான் பிரபலமானார். ’பிக் பாஸ்’ நிகழ்ச்சிகுப் பிறகு அவருக்கு பட வாய்ப்புகளும், விளம்பரங்களும் வந்து குவிகின்றன. 

இந்நிலையில், ஹார்பிக்கின் ’சொவச் பாரத்’ என்று அழைக்கப்படும் தூய்மை இந்தியா திட்ட பிரசாரத்தின் தென்னிந்திய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் கணேஷ் வெங்கட் ராமன். இப்பிரசாரத்தின் வடஇந்திய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருடன் கைகோர்த்துள்ளார் கணேஷ் வெங்கட் ராமன். இதற்காக மும்பையில் நடந்த படப்பிடிப்பில் அக்‌ஷய் குமாரும், கணேஷ் வெங்கட்ராமனும் கலந்து கொண்டனர். 

இது குறித்து கணேஷ் வெங்கட் ராமன் கூறுகையில், “ நான் அக்‌ஷய் குமாரின் மிகப்பெரிய ரசிகன். இப்போதும் அவர், மது அருந்தாமல், எந்த தீய பழக்கங்களும் இல்லாமல்,  உடலை கட்டுக்கோப்போடு வைத்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. அவரோடு சேர்ந்து பணியாற்றியது மறக்க முடியாத ஓர் அனுபவம். தூய்மை இந்தியா திட்டத்தின் முதல்படி நமது வீட்டை நாம் சுத்தமாக வைப்பதிலிருந்து தான் துவங்குகிறது. இந்திய அரசாங்கத்துடன் ‘ஹார்பிக்’  நிறுவனம் இந்த திட்டத்துக்காக கை கோர்த்துள்ளது சிறப்பானதாகும்” என்றார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.