ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி நடித்திருக்கும் 'தடாக்' டிரைலர் வெளியீடு 

  Newstm News Desk   | Last Modified : 11 Jun, 2018 03:22 pm

jhanvi-s-dhadak-trailer-realesed

நடிகை ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்திருக்கும் 'தடாக்' படத்தின் டிரைலர் இன்று வெளியானது.

2016ம் அண்டு மராத்தியில் வெளியான சைராட் படம் மிக பெரிய வெற்றியை அடைந்தது. இந்த படத்தின் இந்தி ரீமேக்கை சாஷங்க் கைதான் இயக்கி உள்ளார். இதில் மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நாயகியாக அறிமுகமாக உள்ளார். அவருக்கு ஜோடியாக 'பியாண்ட் தி கிளவுட்ஸ்' படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த இஷான் கட்டர் நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. 3 நிமிடம ஓடும் இந்த டிரைலர் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ஜான்வி கூறும்போது, "நான் சைராட் படத்தை எனது தாயுடன் தான் பார்த்தேன். அப்போது இது போன்ற ஒரு படத்தின் நான் நடிக்க வேண்டும்என்று அவரிடம் கூறினேன். அவர் இப்போது என்னுடன் இல்லாதது வருத்தமளிக்கிறது" என்றார். 

மேலும் ஜான்வியின் அண்ணனும், பாலிவுட் நடிகருமான அர்ஜூன் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இந்த டிரைலர் வெளியாகும் போது நான் உன் அருகில் இருக்க மாட்டேன். ஆனால் என் அன்பு உன்னுடன் எப்போதும் இருக்கும். சினிமா மிகவும் நல்ல துறை. இங்கு கடின உழைப்பும் நேர்மையும் உன்னை மேன்மேலும வளர்க்கும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close