கபடி கற்றுக் கொள்ளும் கங்கனா ரனாவத்

  திஷா   | Last Modified : 13 Jun, 2018 05:41 am
kangana-ranaut-to-turn-kabaddi-player-in-her-next

கங்கனா ரனாவத் நடிப்பில் 'மணிகர்னிகா: தி குயின் ஆஃப் ஜான்ஸி', 'மென்டல் ஹை க்யா' ஆகியப் படங்களில் நடித்து வருகிறார் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். இதில் மென்டல் ஹை க்யா படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மணிகர்னிகா, ராணி லட்சுமி பாயின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வரும் படம். இதனிடையே தனது அடுத்தப் படத்திற்கான கதை கேட்டல்களிலும் பிஸியாகவே இருக்கிறார் கங்கனா. 

அதன் படி தனது அடுத்தப் படத்தில் கபடி வீராங்கனையாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். இதனை இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி இயக்குகிறார். இவர் தமிழில் `அம்மா கணக்கு', இந்தியில் `நில் பேட்டி சன்னாட்டா', `பார்லி கி தாஃப்ரி' ஆகிய படங்களை இயக்கியவர்.  

இதற்காக அக்டோபர் முதல் டிசம்பர் வரை கால்ஷீட் கொடுத்திருக்கிறார் கங்கனா. அதோடு கபடி பயிற்சி பெறவும் ஆயத்தமாகி வருகிறார். தவிர, பெயரிடப் படாத இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் போன்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close