அமிதாப் - டாப்ஸி இணையும் இரண்டாவது படத்தின் ஷூட்டிங் தொடக்கம்!

  திஷா   | Last Modified : 14 Jun, 2018 05:09 pm
tapsee-starts-for-badla

தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தான் நடிப்பேன் என பெரும்பாலான நடிகைகள் சொல்வதுண்டு. ஆனால் அதை செயல்படுத்துபவர்கள் மிகச் சிலரே. அதில் குறிப்பிடத்தக்கவர் நடிகை டாப்ஸி. 'வை ராஜா வை' படத்திற்குப் பிறகு தமிழில் நடிக்காதவர், இந்தியில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். 

தற்போது தட்கா, சூர்மா, முல்க், மன்மார்ஸியான் என நான்குப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதைத் தவிர 'பட்லா' என்ற படத்திலும் ஒப்பந்தமாகியிருந்தார் டாப்ஸி.  த்ரில்லர் படமாக உருவாகும் இதனை சுஜாய் கோஷ் இயக்குகிறார். 'த இன்விஸிபிள் கெஸ்ட்' என்ற ஸ்பானிஷ் படத்தின் ரீமேக்காக பட்லாவை உருவாக்குகிறார் இயக்குநர். இதில் டாப்ஸி பெண் தொழிலதிபராக நடிக்கிறார். அதோடு பிங்க் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இதில் நடிகர் அமிதாப் பச்சனுடன் மீண்டும் இணைகிறார். 

இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்காட்லாந்தில் நேற்று தொடங்கியுள்ளது. "இது ஒரு மிகச் சிறந்த த்ரில்லராக இருக்கும், இதற்காக என்னுடைய கம்ஃபோர்ட் சோனை விட்டு மறுபடியும் வெளியில் வந்திருக்கிறேன். இப்படி கடினமாக உழைப்பது எனக்கு பிடித்திருக்கிறது" என சொல்கிறார் டாப்ஸி!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close