'சஞ்சு அப்டேட்ஸ்' - நிழலை பாராட்டிய நிஜம்!

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2018 02:47 pm
sanjay-dutt-is-impressed-with-ranbir-kapoor-in-sanju

'சஞ்சு' படத்தில் தனது கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரன்பீர் கபூரை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார் நடிகர் சஞ்சய் தத்.

பாலிவுட் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் அடுத்த படம் 'சஞ்சு'. ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள இப்படம் இம்மாதம் 29-ம் தேதி வெளியாகிறது.

சஞ்ஜய் தத்தின் வாழ்க்கையை மைய்யமாக கொண்ட இந்தப் படத்தில் அனுஷ்கா ஷர்மா, சோனம் கபூர், மனிஷா கொய்ராலா, விக்கி கௌஷால் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். 

நடிகர் சஞ்சய் தத்தின் முகச்சாயல், நடை, உடை, பாவனை என்று அனைத்தும் ரன்பீர் கபூருக்கு கச்சிதமாக பொருந்திப் போக, படத்தின் டீஸர் வெளிவந்த நாள் முதல் அவருக்குப் பாராட்டு மழை குவிந்த வண்ணம் உள்ளது. 

எனினும், தன்னைப் பற்றிய படத்தின் டீஸர் வெளிவந்த பின்னும் எந்தக் கருத்தும் வெளியிடாமல் மவுனம் காத்தார் சஞ்ஜய் தத். 
இந்த நிலையில், அவர் சமீபத்தில் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "ரன்பீர் கபூருக்கு அட்வைஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தப் படத்தில் அவர் அருமையாக நடித்துள்ளார். 'சஞ்சு' செட்களில் நான் கண்ட காட்சிகள் மிகவும் அற்புதமானவை. படத்தைப் பார்க்க நான் மிகவும் ஆவலாக காத்திருக்கிறேன். சஞ்சு டீமிற்கு எனது வாழ்த்துக்கள்" என்று பதிலளித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

சஞ்சய் தத்தின் உற்ற நண்பரான சல்மான் கான் இந்தப் பட ட்ரெய்லர் பற்றி குறிப்பிடுகையில், "இந்தப் படத்தில் சஞ்சய் தத்தே நடித்திருக்க வேண்டும். அவரைத் தவிர வேறு யாராலும் அவரது 10 ஆண்டு கால வாழ்க்கையை திரையில் பிரதிபலிப்பதற்கு நியாயம் செய்ய முடியாது" என்று தனது அதிருப்தியை தெரிவித்தார்.

சஞ்சய் தத் பாராட்டு சரியா? சல்மான் அதிருப்தி நியாயமா? 

காத்திருப்போம் ஜூன் 29 வரை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close