சல்மான் கான் திருந்தவே மாட்டாரா? கதறும் பாலிவுட் விமர்சகர்கள்!

  Newstm News Desk   | Last Modified : 15 Jun, 2018 05:44 pm

salman-khan-s-race-3-opens-up-to-horrible-reviews-and-box-office-records

சல்மான் கான், அனில் கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், பாபி தியோல், டெய்சி ஷா என பெரிய நட்சத்திர கூட்டமே கலந்திருக்கும் பாலிவுட் படம் 'ரேஸ் 3' இன்று உலகெங்கும் வெளியாகியுள்ளது. 

'ரேஸ்' மற்றும் 'ரேஸ் 2' படங்களே விமர்சகர்களின் பொறுமையை சோதித்த நிலையில், 3ம் பாகத்தை சல்மான் கானை வைத்து இயக்குவது தெரிந்தவுடன், அவரது ரசிகர்களை தவிர மற்றவர்களுக்கு கொஞ்சம் ஷாக் தான். ஆனால், மான் வேட்டை வழக்கில் சல்மானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட பின் வெளியாகும் முதல் படம் என்பதால் ரசிகர்கள் கடும் உற்சாகத்தில் உள்ளனர். ஆனால், படம் பார்க்க சென்ற ரசிகர்களோ, 'போதுமடா சாமி' என புலம்பி தள்ளியுள்ளனர்.

முதல் இரண்டு பாகங்களிலும், சம்பந்தமே இல்லாமல் ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் கொடுத்த ரேஸ் படங்கள், இந்தமுறை மூச்சுமுட்டும் அளவிற்கு ஆக்ஷன் காட்சிகளை வைத்து நிரப்ப முயற்சி செய்துள்ளனராம். முதல் காட்சி முதல் க்ளைமேக்ஸ் வரை சல்மான் கான், வில்லனை போட்டு துவைப்பதும், நடிகைகளின் கிளாமர் பாடல்களும் என படத்தோடு சேர்த்து படம் பார்ப்பவர்களையும் செதுக்கியுள்ளாராம் இயக்குனர். வழக்கம் போல சல்மான் கான் ரசிகர்களை தவிர வேறு யாரும் தியேட்டர் பக்கம் கூட சென்றுவிட வேண்டாம், என குமுறுகிறார்கள் பாலிவுட் க்ரிட்டிக்ஸ்.

அவர்கள் என்ன சொன்னால் என்ன? படத்தின் முதல் நாள் கலெக்ஷன் ரூ.30 கோடியை தொட இருக்கிறதாம். முதல் 3 நாட்களில் 100 கோடியை கடப்பது உறுதி என்கிறார்கள். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close