அடுத்த கட்டம் நோக்கி விரையும் ரன்பீர் - ஆலியா காதல்!

  Newstm Desk   | Last Modified : 20 Jun, 2018 04:59 pm
alia-bhatt-and-ranbir-kapoor-planning-to-tie-the-knot-in-2020

பாலிவுட்டில் வலம் வரும் ரன்பீர் - ஆலியா காதல் ஜோடி 2020-ல் திருமண உறவில் அடியெடுத்து வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சோனம் - அஹுஜா திருமணத்தில் ஜோடியாக கலந்துகொண்ட நாள் முதல் பாலிவுட் ரசிகர்களின் கண்கள் ரன்பீர் - ஆலியா மீது திரும்பியது. அதற்கேற்றாற்போல் இந்த ஜோடியும் பல இடங்களில் ஒன்றாக காட்சியளித்து ரசிகர்கள் மனதில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினர்.

ரன்பீர் - ஆலியா முதல்முறையாக இணைந்து நடிக்கும் 'ப்ரஹ்மாஸ்திரா' என்ற படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பின்போது காதல் வலைக்குள் சிக்கிய இருவரும் தங்கள் உறவை அடுத்த நிலைக்கு எடுத்து செல்வார்களா என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருந்து வந்தது.

இதை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பரவி வரும் செய்தி. ஆம், ரன்பீர் - ஆலியா காதல் 2020-ல் திருமணத்ம் என்ற அடுத்த கட்டத்தை எட்டும் என்று நம்பப்படுகிறது.

பாலிவுட் கனவு நாயகனாக வலம் வரும் ரன்பிர் கபூர் முதலில் சோனம் கபூருடனும் பின்னர் தீபிகா படுகோனேயுடனும் கிசுகிசுக்கப்பட்டார். கேத்ரினாவுடன் பழகிவிட்டு பிரிந்தார். அதேபோல் ஆலியாவும் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து வந்ததாக செய்தி உண்டு. ஆனால் ரன்பீர் - ஆலியாவுக்கு இடையில் இப்போது மலர்ந்திருக்கும் காதல் மிகவும் உறுதியானது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

35 வயதாகும் ரன்பீரும், 25 வயதாகும் ஆலியாவும் திருமணம் செய்து வாழ்வில் சீக்கிரம் செட்டில் ஆக வேண்டும் என்ற ஒரே எண்ண ஓட்டத்தில்தான் இருக்கிறார்கள் என்றும் புரிகிறது. 

'ராஸ்ஸி' பட வெற்றிக்குப் பின்னர் ஆலியா பட் வெற்றிப் பட ஹீரோயின்கள் பட்டியலில் இணைந்துள்ளார். ரன்பீர் "சஞ்சு" பட ரிலீசுக்கு காத்திருக்கிறார். தொழில் வாழ்க்கையில் உச்ச நிலையில் இருக்கும் தருணத்தில் இருவரின் திருமணம் பற்றிய செய்தி வந்திருப்பது ரசிகர்களிடையே ஆர்வத்தைப் பெருக்கியுள்ளது. 

முதல் முறையாக இவர்கள் இணைந்து நடிக்கும் 'ப்ரஹ்மாஸ்திரா' வெளிவந்தவுடன், இவர்களின் கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் திரையில் காணலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close