நவம்பரில் தீபிகாவுக்கு டும் டும் டும்!

  திஷா   | Last Modified : 23 Jun, 2018 05:56 am
deepika-ranveer-to-tie-the-knot-at-italy

பாலிவுட்டின் தற்போதைய ஹாட் டாபிக் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்கின் திருமணம் தான். 5 வருடங்களுக்கு மேலாக காதலில் இருக்கும் இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக சில மாதங்களாகவே செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. 

சஞ்சய் லீலா பன்சாலியின் ராம் லீலா செட்டில் தொடங்கிய இவர்களின் காதல் கதை இந்த வருட இறுதியில் திருமணத்தில் முடிய இருக்கிறது. பாலிவுட்டின் நெருங்கிய வட்டார தகவலின் படி நவம்பர் 10, 2018-ல் இவர்கள் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தெரிகிறது. தீபிகாவும் ரன்வீரும் தங்களது திருமணத்தில் எல்லாமே பெர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என நினைப்பதால், நவம்பர் மாதம் தான் இருவருக்கும் வசதியாக இருக்கிறதாம்.    

அதே போல் பெங்களூர் அல்லது இத்தாலி அல்லது இரு இடங்களிலும் திருமணம் நடக்கலாம் எனவும் தெரிகிறது. கடந்த வருடம் மற்றொரு நட்சத்திர ஜோடியான விராட் கோலி - அனுஷ்கா ஷர்மாவின் திருமணமும் இத்தாலியில் நடந்தது குறிப்பிடத் தக்கது. தற்போது இருவீட்டாரும் திருமணத்திற்கான ஷாப்பிங்கில் மும்முரமாக ஈடுப்பட்டிருக்கிறார்களாம். குறிப்பாக ரன்வீர் சிங் தான் அதிக எக்ஸைட்மென்டில் இருக்கிறாராம். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close