துல்கர் சல்மான் அறிமுகமாகும் இந்தி பட ட்ரைலர்!

  திஷா   | Last Modified : 28 Jun, 2018 05:34 am

dulquer-s-bollywood-debut-karwaan-trailer

சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்திருந்த ‘மகாநடி என்கிற நடிகையர் திலகம்’ வெளியாகியிருந்தது. சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான அதில், ஜெமினி கணேஷன் ரோலில் துல்கர் நடித்திருந்தார்.  தற்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், வான் ஆகிய தமிழ் படங்கள் உட்பட 2 மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். 
தவிர இவர் பாலிவுட்டில் அறிமுகமும் ஆகிறார், அந்தப் படம் ‘கர்வான்’ (KARWAAN). இப்படத்தை அகர்ஷ் ஹூரானா என்பவர் இயக்கி வருகிறார். ஹீரோயினாக மிதிலா பால்கர் நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் இர்ஃபான் கான் நடித்திருக்கிறார். இதனை ‘RSVP மூவீஸ் – ISHKA ஃபிலிம்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைப்பெற்று வருகின்றன. சமீபத்தில், வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது படத்தின் ட்ரைலரும் வெளியாகியிருக்கிறது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப் படுத்தியிருக்கிறது. அதோடு படமும் ஆகஸ்ட் 3 - ம் தேதி வெளியாகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close