தன்னை விட 10 வயது குறைந்தவரை காதலிக்கும் ப்ரியங்கா சோப்ரா!

  திஷா   | Last Modified : 29 Jun, 2018 05:18 am
priyanka-chopra-calls-nick-jonas-her-favourite-man

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் ப்ரியங்கா சோப்ரா. தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கைத்தேர்ந்தவர். 35 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. 

கடந்த சில நாட்களாக நிக் ஜோனஸ் என்பவருடன் ப்ரியங்கா சோப்ரா ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக வட இந்திய ஊடகங்கள் எழுதின. ஆனால் இதைப்பற்றி மறுப்பும், ஏற்பும் தெரிவிக்காத ப்ரியங்கா அமைதியாக இருந்தார். 

ஆனால் நிக்குடன் டேட்டிங் மற்றும் வெளியிடங்களுக்கு சென்று வந்தார். அந்த புகைப் படங்களும் வைரல் ஆனது. நிக் ஜோனஸ் அமெரிக்கப் பாடகராவார். இவரின் வயது என்ன தெரியுமா 25. அதாவது ப்ரியங்காவை விட 10 வயது குறைந்தவர். சமூக வலைதளங்களில் 'ஆண்டியுடன் காதலா' என விமர்சிக்கிறார்கள். 35 வயது ரன்பீர், 25 வயது ஆலியாவை காதலித்தால் 'க்யூட்' என்பீர்கள். இதுவே ஒரு பெண் வயதில் மூத்தவளாய் இருந்தால் ஆண்டியா? ரன்பீரை அங்கிள் என சொல்ல வேண்டியது தானே என்று, ஒருபுறம் ப்ரியங்காவிற்கு ஆதரவும் பெருகுகிறது. 

ஆனால் இதையெல்லாம் கண்டுக் கொள்ளாத ப்ரியங்கா, கோவா பீச்சில் எடுத்த நிக்கின் ஃபோட்டோவை இன்ஸ்டாவில், 'மை ஃபேவெரிட் மென்' என்ற கேப்ஷனோடு பகிர்ந்துள்ளார். 
 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close