கலங்கடிக்கும் 'குல் மக்காய்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2018 07:19 pm

malala-yousafzai-s-biopic-gul-makai-first-look-poster

"ஒரு குழந்தை, ஒரு ஆசான், ஒரு புத்தகம், ஒரு பேனா - உலகை மாற்ற வல்லது" என்று தொடங்குகிறது அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர். 

பள்ளிக்குப் படிக்க சென்றதனால் அந்த மாணவி, தாலிபான் தீவிரவாதிகளால் அக்டோபர் 9, 2012 ஆம் ஆண்டு தலையிலும் கழுத்திலும் சுடப்பட்டார். அந்தப் பள்ளி மாணவியின் வாழ்க்கை முடிந்தது என்று நம்பியவர்களுக்கு, விதியை வென்று திரும்பி வந்து கல்விக்காகவும் பெண்களுக்காகவும் போராடி அமைதிக்கான நோபல் பரிசையும் வென்றார். அந்த மகத்தானப் பெண் மலாலாவைப் பற்றிய படம்தான் "குல் மக்காய்".

"பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்களை ஜிஹாத், மதம் என்ற பெயரில் தாலிபான்கள் கொடுமை செய்து வந்த நேரம். பாகிஸ்தானின் ஒரு குக்கிராமத்திலிருந்து தாலிபான்களுக்கு எதிராக எழுந்தது ஒரு பெண்ணின் குரல்" - மோஷன் போஸ்டரின் வாய்ஸ் ஓவர் நம் மனதில் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. 

யார் அந்த நோபல் பரிசு பெற்ற பெண் என்று நினைவுகூரும்போது நம் கண் முன் வருகிறார் மலாலா யூசப்சாய். கையில் எரிந்து கொண்டிருக்கும் புத்தகத்தை சுமந்து கொண்டிருக்கும் பெண் போஸ்டரில் காட்சி தருவது, "பாவம், என்ன பாடு பட்டிருப்பாளோ?" என்று நம்மை நினைக்க வைக்கிறது.

காஷ்மீரில் படமாக்கப்பட்ட இந்தப் படம் அம்ஜத் கான் என்பவரால் இயக்கப்படுகிறது. திவ்யா தத்தா இந்தப் படத்தில் மாலாலாவாக நடிக்கிறார். 

'குல் மக்காய்' என்ற பெயர் தனது உருது ப்ளாக் பக்கங்கள் எழுதுவதற்கு மலாலா பயன்படுத்திய பெயர். ஸ்வாட் பள்ளத்தாக்கில் தொடங்கி, நோபல் பரிசு வரை மாலாலாவின் பயணத்தை அழகாக சித்தரிக்கும் படமாக இது விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நம்மைக் கலங்கடிக்கும் போஸ்டர் போல் படமும் நம் மனதிற்குள் உருகி நிற்குமா என்று பொருத்திருந்து பார்க்கலாம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.