கர்ப்பமாக இருக்கும் ரம்பா என்ன செய்தார் தெரியுமா?

  திஷா   | Last Modified : 10 Jul, 2018 07:20 pm
salman-khan-with-his-90-s-co-star-guess-who

90-களின் இறுதியிலும் 2000-ன் முற்பகுதியிலும் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்பா. தொடையழகி என்பது ரசிகர்கள் இவருக்குக் கொடுத்தப் பட்டம். 

இவர் 2010-ம் ஆண்டு இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, அவரை கோர்ட் வரை கூட்டிச் சென்றது. இருப்பினும் இருவரும் கலந்துப் பேசி மீண்டும் இணைந்தனர். 

இதற்கிடையே தான் மூன்றாவது முறை கர்ப்பம் தரித்திருப்பதாக சில நாட்களுக்கு முன்பு தனது சமூக வலைதளங்கள் அனைத்திலும் ரம்பாவே அறிவித்தார். 

தற்போது பாலிவுட் நடிகர் சல்மான் கான்  Da-Bangg என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் கனடாவில் நிகழ்ச்சிகள் செய்து வருகிறார். இதில் சல்மானுடன் சேர்ந்து பிரபுதேவா, சோனாக்‌ஷி சின்ஹா, ஜாக்குலின் ஆகியோரும் இருக்கிறார்கள். அவர்கள் டொரண்டோ வந்திருப்பதை அறிந்த ரம்பா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் சென்று அவர்களைப் பார்த்ததோடு புகைப்படமும் எடுத்திருக்கிறார். அந்தப் படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. 

சல்மான் கானும் ரம்பாவும் 1997-ல் வெளியாவ ஜுட்வா என்ற படத்தில் ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close