ரஷ்யா கால்பந்து கொண்டாட்டத்தில் அமிதாப்!

  திஷா   | Last Modified : 11 Jul, 2018 01:01 pm
amitabh-and-abhishek-bachchan-enjoy-fifa

ரஷ்யாவில் நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதி போட்டியை அமிதாப் பச்சனும், அபிஷேக் பச்சனும் நேரில் கண்டு களித்தனர். 

கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தில் முதல் அரையிறுதிப் போட்டி ரஷ்யாவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் 7-வது இடத்திலிருந்த பிரான்ஸ், 3-வது இடத்திலிருந்த பெல்ஜியம் அணியுடன் மோதியது. கடைசியில் பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது பிரான்ஸ். இதனால் மூன்றாவது முறையக இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணி என்ற பெருமையையும் இது பெற்றிருக்கிறது. 

இந்த மேட்சை பாலிவுட்டின் உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சன் தன்னுடைய மகன் அபிஷேக்குடன் நேரில் பார்த்து ரசித்திருக்கிறார். அங்கு எடுத்துக் கொண்ட படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்த அபிஷேக், 'பிரான்ஸ் - பெல்ஜியம் ஃபிபா செமி ஃபைனல்ஸ் என்ற ஹேஷ்டேக்கோடு, வெற்றி பெற்ற பிரான்ஸ் அணியினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

இவர்கள் இருவர் மட்டுமல்ல, மொத்த குடும்பமே ஃபிபாவுக்காக தற்போது ரஷ்யாவில் முகாமிட்டிருக்கிறார்களாம். செவ்வாய் கிழமை அமிதாப் தனது இன்ஸ்டாவில் மகள் ஸ்வேதா நந்தா, பேரன் அகஸ்த்யா நந்தா, பேத்தி நவ்யா நந்தா இவர்களுடன் அபிஷேக்கும் இருக்கும் ஒரு படத்தை வெளியிட்டு இருந்தார்.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் ஃஎப்.சி அணி உரிமையாளர்களுள் ஒருவராக அபிஷேக் பச்சன் இருக்கிறார். மற்றொரு உரிமையாளராக எம்.எஸ்.தோனி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close