நான் தனியாக இல்லை: புற்றுநோயில் இருந்து மீண்டு வரும் சொனாலி

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2018 08:32 pm
sonali-bendre-new-hairstyle-and-melting-message-to-fans

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் சொனாலி பிந்த்ரா தனக்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு பலம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். 

தமிழில் காதலர் தினம் படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை சொனாலி பிந்த்ரா. இவர் சமீபத்தில் வெளியிட்டு இருந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தான் புற்றுநோயால் தாக்கப்பட்டதாக அவர் தெரிவித்து இருந்தார். மேலும் இதற்காக சிகிச்சை எடுக்க நியூயார்க் செல்வதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் அவருக்கு சிகிச்சை தொடங்கி உள்ள நிலையில் தன்னுடைய புதிய தோற்றத்தை சமூக வலலாளத்தில் வெளியிட்டுள்ள சொனாலி நீண்ட பதிவையும் போட்டுள்ளார். 

அதில், "எனக்கு பிடித்த எழுத்தாளர் இசபெல் அலெண்டே கூறுவது போல, 'தகுந்த சூழ்நிலை வரும் போது தான் நமக்குள் இருக்கும் முழு பலத்தையும் காட்ட முடியும் என்பதை நான் உணர்ந்துள்ளேன். சோதனைகளில், போரில் மனிதர்கள் அசாத்தியமான காரியங்களை செய்கின்றனர். 

கடந்த சில நாட்களாக எனக்கு கிடைக்கும் அன்பு நெகிழ வைக்கிறது. பலர் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த அனுபவத்தை என்னிடம் கூறி எனக்கு மன தைரியத்தை கொடுத்தனர். 

அவை அனைத்தும் எனக்கு நிறைய பலத்தை கொடுத்துள்ளது. மேலும் நான் தனியாக இல்லை என்பதை உணர வைத்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாவல்களை சந்திக்க நேரிடுகிறது. இப்போதைக்கு நேர்மறையான தோற்றம் மட்டுமே எனது இலக்கு. இந்த பயணத்தை பகிர்ந்து கொள்வதும் இதில் இருந்து மீண்டு வருதற்கான ஒரு பகுதிதான். இதன் மூலம் அனைவருக்கும் தங்களை புரிந்து கொள்ள, உறுதுணையாக இருக்க, மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை தான் நான் கூற விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close