சஞ்சு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா?

  திஷா   | Last Modified : 13 Jul, 2018 07:06 am
is-rajkumar-hirani-planning-for-a-sequel-of-sanju

பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருந்தப் படம் 'சஞ்சு'. நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றை, சஞ்சுவாக இயக்கியிருந்தார் அவர். இதில் சஞ்சய் தத்தாக பல்வேறு கெட்டப்புகளில் ரன்பீர் கபூர் நடித்திருந்தார். இதுவரை பாக்ஸ் ஆஃபிஸில் 300 கோடிக்கும் மேல் வசூலித்து, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தைப் பார்த்த, ரசிகர்கள் சஞ்சய் தத்தின் வாழ்க்கையில் நடந்த இன்னும் சில சம்பவங்களையும் காட்டியிருக்கலாம் என கருத்துத் தெரிவித்தனர். 

அதே நேரத்தில் படத்தைப் பார்த்த சஞ்சய் தத், இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியை கட்டித் தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். அதோடு ரசிகர்களுக்குத் தெரிவிக்க தன்னிடம் இன்னும் நிறைய சம்பவங்கள் இருப்பதால், இதன் அடுத்தப் பாகத்தையும் எடுக்குமாறு கேட்டுக் கொண்டார் என செய்திகள் வெளியானது. 

சமீபத்திய தொலைக்காட்சி நேர்க்காணலில் சஞ்சய் தத்திடம் இதைப் பற்றி கேட்டனர். அதற்கு அவர், 'ஒரு மனிதனுக்கு ஒரு வரலாற்றுப் படம் தான் இருக்க முடியும். அதனால் இதன் இரண்டாம் பாகம் வருவதாக சொல்லப்பட்ட செய்திகள் அனைத்தும் வதந்தி' என்றார்.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சிறை தண்டனைப் பெற்று, அரசின் தயவால் தண்டனையை முழுமையாகக் கூட அனுபவிக்காமல் வெளியே வந்தவர். திருமணம் மற்றும் பொது வாழ்வு எதிலும் நேர்மையற்றவராக இருக்கும் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை எல்லாம் படமாக எடுத்ததே தப்பு. இதில் இரண்டாம் பாகம் மிகவும் முக்கியமா என்றும் நெட்டிசன்கள் சிலர் கொந்தளித்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close