தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவரின் காதலியாக நடித்திருந்தவர் திஷா பதானி. இதன் மூலம் பாலிவுட் தாண்டி ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களின் கனவத்தையும் பெற்றார்.
தற்போது சுந்தர் சி இயக்கும் சங்க மித்ரா படத்தில் டைட்டில் ரோலிலும் நடிக்கிறார். திஷா தமிழில் அறிமுகமாகும் படமே மிக பிரமாண்டப் படம் என்பதால் மற்ற நடிகைகளின் காதில் புகை வர வைத்திருக்கிறார்.
சமீப காலமாக தனது பிகினி படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் திஷா. அந்த வகையில் நேற்றும் ஒரு புதிய போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
அதைப் பார்த்த ரசிகர்கள் அந்த ஃபோட்டோவிற்கு லைக் மழை பொழிதுக் கொண்டிருக்கின்றனர். இது வரை 10 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு மேல் அந்த படத்தை லைக் செய்திருக்கின்றனர்.