அபிஷேக் பச்சனின் புதிய பட ரிலீஸ் தேதி

  திஷா   | Last Modified : 21 Jul, 2018 06:51 pm
manmarziyan-release-date

'ஹவுஸ்ஃபுல் 3' படத்திற்கு பிறகு அபிஷேக் பச்சன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'மன்மர்ஸியான்' (Manmarziyaan). இந்தப் படத்தை பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்குகிறார். இவருடன் டாப்ஸி, விக்கி கெளஷல் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

பிரபல இயக்குநர் ஆனந்த் எல் ராயின் 'கலர் எல்லோ புரொடக்ஷன்ஸ்' மற்றும் அனுராக் கஷ்யாப் - விக்ரமாதித்ய மோத்வானேவின் பேண்டம் ஃபிலிம்ஸ்' நிறுவனங்கள் இணைந்து இதனை தயாரிக்கின்றன. ஈரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இதனை வெளியிடுகிறது. 

படத்திற்கு அமித் த்ரிவேதி இசையமைத்து வருகிறார். பஞ்சாப்பில் நடக்கும் லவ் அண்ட் ரொமான்டிக் ஸ்டோரியாக இது உருவாகிறது. இதனை வரும் செப்டம்பர் 21-ம் தேதி ரிலீஸ் செய்யப் போவதாக படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆனந்த் எல் ராய் தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close