ப்ரியங்கா வாய்ப்பை தட்டிப் பறித்த கத்ரீனா!

  திஷா   | Last Modified : 31 Jul, 2018 03:19 am
katrina-kaif-replaces-priyanka

‘ரேஸ் 3’ படத்திற்கு பிறகு சல்மான் கான் நடிக்கவிருக்கும் படம் ‘பாரத்’. அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கும் இந்தப் படத்தில் நடிகைகள் திஷா பதானி, தபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தை ‘டி சீரீஸ் – ரீல் லைஃப் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. ஏற்கெனவே, துவங்கிய இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள் படக்குழுவினர்.

முதலில், இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா சோப்ரா ஒப்பந்தமாகியிருந்தார். சமீபத்தில், இதிலிருந்து விலகியிருக்கிறார். தற்போது, பிரியங்காவின் கேரக்டரில் நடிக்க கத்ரினா கைஃப் கமிட்டாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் அமெரிக்கா மற்றும் கனடாவில் சல்மான் நடத்திய தபாங் கலை நிகழ்ச்சியில் கத்ரீனா கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. செப்டம்பரில் இதன் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ளும் கத்ரீனாவுக்கு இது சல்மானுடன் நடிக்கும் ஆறாவது படம் ஆகும்.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close