தீபிகாவின் மெழுகு சிலைக்கு இவ்வளவு காஸ்ட்லி பேண்ட்டா?

  கனிமொழி   | Last Modified : 02 Aug, 2018 08:56 pm
deepika-s-wax-figure-to-wear-the-most-costly-pant

சினிமா பிரபலங்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வதற்கு எடுத்துக்காட்டாக தற்போது லண்டன் அருங்காட்சியத்தில் அமைக்க இருக்கும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் மெழுகு சிலை அணியும் பேண்ட் மிக ஆடம்பரமானது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த லெதர் பேண்டின் விலை ஒரு லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் என்பது வியக்க வைத்தது.

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் மெழுகுச் சிலை லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளது. லண்டனில் மிகவும் பிரபலமானது மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம்.  இதுகுறித்து தீபிகா படுகோன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து மகிழ்ச்சியடைந்துள்ளார். அருங்காட்சியகத்தை சேர்ந்த நிபுணர்கள் சிலை வடிப்பதற்காக, தீபிகா படுகோனை பல்வேறு கோணங்களில் அளவுகளும், புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.

தீபிகா படுகோன் சிலை வைக்கப்படுதற்கான பணிகள் நடைப்பெற்று வரும் நிலையில் 2019ம் ஆண்டு தொடக்கத்தில் அவரது சிலை நிருவப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் ஏற்கனவே பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பட்சன், சச்சின் டெண்டுல்கர், ஷாரூக் கான் ஆகியோரது சிலைகள் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close