இயக்குநராகிறார் ஐஸ்வர்யா ராய் - ஆனால் இப்போதைக்கு இல்லையாம்!

  Newstm Desk   | Last Modified : 07 Aug, 2018 02:53 am
aishwarya-rai-dreams-to-be-a-director

‘ஏ தில் ஹாய் முஷ்கில்’ படத்துக்குப் பிறகு சிறிய இடைவெளி விட்டு ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கும் படம் ‘ஃபன்னி கான்’. அதுல் மஞ்ச்ரேகர் இயக்கியுள்ள இந்தப் படத்தில், அனில் கபூர் மற்றும் ராஜ்குமார் ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியாகியுள்ள இத்திரைப்படம் மியூஸிக்கல் காமெடி என்பது குறிபிடத்தக்கது.

இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா ராய், விரைவில் நான் ஒரு படம் இயக்கவுள்ளேன் என்று தன் கனவை வெளிப்படுத்தியுள்ளார். தன்னுடைய இந்தக் கனவுக்கு மிகப்பெரிய ஆதரவு  கொடுத்து வருகிறார் அபிஷேக் பச்சன் என்பதையும் தெரிவித்துள்ளார்.

மேலும், படம் இயக்கும் கலையைக் கற்றுக்கொள்ளும் தன் விருப்பத்தைப் பார்த்து, இயக்குநர்கள் கிண்டல் செய்யலாம் என்று ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார். தான் இயக்குநராக இன்னும் சில வருடங்கள் ஆகலாம் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். மிகப்பெரிய இயக்குநர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஐஸ்வர்யா ராய். அவரை வைத்துப் படமெடுக்க பல இயக்குநர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தன்னுடைய இத்தனை ஆண்டுகால கனவை வெளியிட்ட ஐஸ்வர்யா ராய்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close