அனுஷ்கா ஷர்மா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

  Newstm Desk   | Last Modified : 11 Aug, 2018 05:06 pm
sui-dhaaga-first-look-poster

அனுஷ்கா சர்மா எம்ப்ராய்டரி செய்பவராக நடிக்கும் 'சூய் தாகா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

வருண் தவான், அனுஷ்கா சர்மா நடிக்கும் காமெடி ட்ராமா படத்தின் தலைப்பு தான் சூய் தாகா. டைலராக வருண் தவானும், எம்ப்ராய்டரி வேலை செய்யும் அனுஷ்காவும் ஹீரோ – ஹீரோயினாக இப்படத்தில் நடித்துள்ளனர். ஷரத் கட்டரியா இயக்கி வரும் இந்த  படத்தை ‘யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. அனு மாலிக் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

ஹீரோ வருண் தவான் தனது ட்வீட்டர் பக்கத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

மேக் இன் இந்தியா திட்டத்தை பற்றி இப்படம் பேசும் என்றும், நம் துணி பிசினஸ் பற்றியும் இந்த திரைப்படத்தில்  சொல்லப்பட்டுள்ளது.  ஆகஸ்ட் 13-ஆம் தேதி டிரைலரும், செப்டம்பர் 28-ஆம் தேதி படமும் ரிலீசாகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close