ஶ்ரீதேவியின் பிறந்தநாளில் ஜான்வி செய்தது என்ன தெரியுமா?

  திஷா   | Last Modified : 13 Aug, 2018 06:51 pm
jahnvi-s-post-on-sridevi-s-birthday

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஶ்ரீதேவி. ரஜினி, கமல் என இரு பெரும் நடிகர்களுடன் ஒரு ரவுண்ட் வந்தவர். இன்றைய நடிகைகள் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருப்பவர். தென்னிந்திய சினிமாவில் நடித்துப் புகழ் பெற்று, இந்தி திரையுலகிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். பல முன்னணி இயக்குநர்கள், நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் இவர் கடந்த பிப்ரவரியில் உடல் நல பிரச்னை காரணமாக மறைந்தார். 

இன்று ஸ்ரீதேவியின் 55-வது பிறந்தநாள். அதனை நினைவு கூறும் விதமாக அம்மா ஸ்ரீதேவி அப்பா போனி கபூர் ஆகியோருடன் தான் கைக்குழந்தையாக இருக்கும் ஒரு படத்தை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் ஜான்வி கபூர். 

'எப்போதும் அன்பு என்ற கேப்ஷனில் முதல் படத்தையும், அழகிய தருணங்களை நினைவு கூறுகிறேன், மிஸ் யூ மாம்' என பதிவிட்டு, ஶ்ரீதேவியின் முக்கியக் கதாப்பாத்திரங்கள் இடம்பெற்ற மற்றொரு படத்தையும் ஜான்வி ஷேர் செய்துள்ளார். 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close