11 வயது இளையவரை கரம் பிடிக்கிறார் பிரியங்கா சோப்ரா!

  திஷா   | Last Modified : 19 Aug, 2018 02:00 pm
priyanka-nick-engagement

உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா, முதன் முதலில் தமிழில் தான் ஹீரோயினாக அறிமுகமானார். விஜய்யுடன் அவர் நடித்த 'தமிழன்’ படம் தான் அவரது கரியரில் முதல் படம். பிறகு பாலிவுட், ஹாலிவுட் என இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டினார்.  ஹாலிவுட்டில் அவர் நடிக்கும் 'குவான்டிகோ' சீரியல், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் அவருக்கும் பாப் பாடகர் நிக் ஜோனஸுக்கும் காதல் மலர்ந்தது.

நிக் ஜோனாஸ், பிரியங்கா சோப்ராவை விட 11 வயது இளையவர் என்பதால் முதலில் இவர்களின் காதல் விவகாரம்  கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. அதோடு இருவரும் ஜோடியாக வெலியிடங்களுக்கு சென்று வரும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இருப்பினும் வழக்கம் போல் பிரியங்காவும் நிக்கும் தங்களது காதலைப் பற்றி வாய் திறக்காமல் இருந்தனர். 

இந்நிலையில் கடந்த மாதம் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனாஸ் நிச்சயதார்த்தம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடைப்பெற்றதாக, தகவல் வெளியானது.

அப்போது அணிவிக்கப் பட்ட மோதிரத்தை தான் பிரியங்கா சோப்ரா செய்தியாளர்களிடம் இருந்து மறைத்தார். அந்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்போது பிரியங்காவின் நிச்சயதார்த்த பார்ட்டி நடந்துள்ளது. இதில் இந்திய வழக்கப்படி சில சடங்குகள் செய்யப் பட்டுள்ளது. இதற்காக நிக்கின் பெற்றோர்களும் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கின்றனர். இப்போது அந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close