ஶ்ரீதேவியின் இரண்டாவது மகள் யாருடன் அறிமுகமாகிறார் தெரியுமா?

  திஷா   | Last Modified : 30 Aug, 2018 04:16 am

khushi-kapoor-to-make-her-debut

மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் 'தடாக்' படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானார். படத்தின் நாயகன் இஷான் கத்தருக்கும் அந்தப்படம் அறிமுகப் படம் என்பதால், பலமான எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி வெற்றியும் பெற்றது. 

இந்நிலையில் ஶ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூரும் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறாராம். அதுவும் யாருடன் தெரியுமா? பாலிவுட்டின் உச்ச நடிகரான ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானுடன்! 

இவர்கள் இருவரும் அறிமுகமாகும் இந்தப் படத்தினை பாலிவுட்டின் முன்னணி இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தயாரிக்கிறாராம். போனி கபூரின் குடும்பத்திற்கு நெருக்கமான இவர், குஷியின் சினிமா என்ட்ரி பிரமாண்டமாக இருக்க வேண்டும் என நினைக்கிறாராம். அதற்காக சிறந்த கதைகளை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறாராம். 

அதனால் இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் பாலிவுட் ரசிகர்கள். ஒருவேளை இது உண்மையாகும் பட்சத்தில் 'மோஸ்ட் வெய்டெட்' பட வரிசையில் இந்தப் படமும் இடம் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 
www.newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close