சவூதி அரேபியா திரையரங்குகளில் வெளியான முதல் இந்தி படம் என்ற பெருமையை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் கோல்ட் படம் பெற்றுள்ளது. ரஜினி காந்த நடித்த காலா திரைப்படத்திற்கு அடுத்து பாலிவுடில் ரீமா காக்தி இயக்கிய கோல்ட் திரைப்படம் சவுதியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
முன்னதாகவே சவுதி அரேபியாவில் திரைப்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தடை விலக்கப்பட்டு புதிய திரையரங்குகள் அமைக்கப்பட்டன. கடந்த மே மாதம் ப்ளாக் பாந்தர் என்ற திரைபடமும் சவுதி திரையரங்கில் திரையிடப்பட்டது.
1948 லண்டன் ஒலிம்பிக்சில் இந்தியா வென்ற முதல் தங்க பதக்கத்தை கதை கருவாய் அமைத்து உருவாக்கப் பட்ட திரைப்டம் தன் கோல்ட். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், மவுனி ராய், குனால் கபூர் ஆகியோர் நடித்த கோல்ட் திரைப்படம் சவுதியில் திரையிடப்பட்ட முதல் இந்தி திரைப்படமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அக்ஷய் குமார் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் ரீமா காக்தி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள கோல்ட் படம் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று இந்தியாவில் ரிலீசாகி ௧௦௦ கோடி பாக்ஸ் ஆபீஸ் லிஸ்டில் இடம் பெற்றுள்ளது.
newstm.in