பாலிவுட்டின் டாப் 5 கண்ணழகிகள் | முதல் இடத்தில் அனைவருக்கும் பிடித்த ஒருவர்

  திஷா   | Last Modified : 12 Sep, 2018 08:34 am

top-5-bollywood-actresses-who-have-the-most-beautiful-eyes

ஒவ்வொருவரிடமும் ஒருவித சிறப்பு இருக்கும். அப்படி பாலிவுட்டில் யாருக்கெல்லாம் அழகான கண்கள் இருக்கிறது என்பதில் முதல் ஐந்து பேரை இங்கே பட்டியலிடுகிறோம். 

5. ஷ்ரத்தா கபூர் 

பாலிவுட்டின் இளம் நடிகையான இவர் ஆஷிக்கி 2 படத்தின் மூலம் பலரின் கவனத்தையும் பெற்றார். அழகான முகத்துக்கும் கண்களுக்கும் சொந்தக்காரர். இப்போது தென்னிந்திய சினிமாவிலும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். தெலுங்கு நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக 'சாஹோ' என்றப் படத்தில் நடித்திக் கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தப் படம் தயாராகிறது. 

4. கத்ரீனா கைஃப் 

இவரின் அழகுக்கு பல மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை ஒரே ஒரு மலையாளப் படத்தில் நடித்துள்ளார். இருப்பினும் இவர் நடித்த ஒரு 'மாம்பழ குளிர்பான' விளம்பரம் ரசிகர்கள் மத்தியில் படு ஃபேமஸ். 

3. கரீனா கபூர் 

பாலிவுட்டின் 'மோஸ்ட் பியூட்டிஃபுல்' ஆக்ட்ரெஸ் என இவரைச் சொல்லலாம். திருமணத்திற்குப் பிறகு எடையைக் குறைத்து கலக்கி வருகிறார். திருமணத்திற்குப் பிறகு 'கி&கா' என்ற படு ரொமாண்டிக் படத்திலும், தாயன பிறகு உடலைக் குறைத்து 'வீர் தி வெட்டிங்' படத்திலும் அப்ளாஸ்களை அள்ளியவர். 

2. ஐஸ்வர்யா ராய் 

கண்களைக் குறிப்பிடும் போது, ஐஸ்வர்யாவைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியுமா? உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கும் இவருக்கு, இவரின் நீல நிற கண்கள் ரொம்பவும் ஸ்பெஷல்! மொழியைக் கடந்து அனைத்துத் தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர். தென்னிந்திய சினிமாக்கு நன்கு பரிச்சயமானவர். அவரை இப்படி குறிப்பிடுவதற்கு, சூப்பர் ஸ்டாருடன் அவர் நடித்த எந்திரன் ஒன்று போதாதா? 

1. தீபிகா படுகோன் 

பாலிவுட்டின் கவர்ச்சியான மற்றும் அழகான நடிகை. அவருடைய கண்கள் ஒப்பனை இல்லாமலேயே பலரின் கவனத்தையும் ஈர்க்கும் திறன் மிகுந்தது.  கொங்கனியை தாய் மொழியாகக் கொண்ட இவர், அறிமுகமானதே ஐஸ்வர்யா என்ற கன்னடப் படத்தில் தான்! 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.