விவாகரத்து ஆகியும் சிங்கிளாக வாழும் பாலிவுட் பிரபலங்கள்

  திஷா   | Last Modified : 14 Sep, 2018 04:08 pm
bollywood-ex-wives-who-chose-to-stay-single-after-divorce

காதல், கல்யாணம், லிவிங் டுகெதர், விவாகரத்து, இதெல்லாம் சாதாரணமாகி விட்ட சூழலில் பாலிவுட்டில் இதன் தாக்கம் மிக அதிகம். விவாகரத்துப் பெற்ற பின் தங்களுக்குப் பிடித்தத் துணையை மீண்டும் தேர்ந்தெடுத்து வாழத் தொடங்குகிறார்கள். இதற்கிடையே தங்களது குழந்தைகளே வாழ்க்கை என எண்ணி இன்னொரு திருமணம் செய்துக் கொள்ளாமல், 'சிங்கிள் மதராக' இருக்கும் சில பாலிவுட் பிரபலங்களை இங்கேப் பார்ப்போம். 

கரிஷ்மா கபூர் 

90-களில் முன்னணி நடிகையாக இருந்த இவர் 2004-ல் சஞ்சய் கபூர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு சமைரா என்ற மகளும், கியான் என்ற மகனும் உள்ளனர். 2016-ல் விவாகரத்து ஆனதும் தன் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார் கரிஷ்மா. 

அம்ரிதா சிங்

80-களில் பிரபல நடிகையாக இருந்த இவர் 91-ல் சாயிஃப் அலிகானை மணந்துக் கொண்டார். அவருக்காக முஸ்லிமாக மாறினார். சாரா அலிகான் மற்றும் இப்ரஹிம் அலிகான் என இரு குழந்தைகள். பிறகு 2004-ல் இவருக்கும் சாயிஃப்புக்கும் விவாகரத்தானது. பின்னர் 2012-ல் சாயிஃப் கரீனா கபூரை மணந்துக் கொண்டார். ஆனால் அம்ரிதா குழந்தைகளுடன் வசிக்கிறார். 

ரேயா பிள்ளை 

ஒரு காலத்தில் பிரபல மாடலாகவும் நடிகையாகவும் இருந்தவர். 84-ல் மைக்கேல் வாஸ் என்பவரை திருமணம் செய்து, 94-ல் விவாகரத்து ஆனார். பிறகு 2008-ல் சஞ்சய் தத்துடன் திருமணம். அதுவும் 2008-ல் முடிவுக்கு வந்தது. இதற்கிடையில் டென்னீஸ் பிளேயர் லியாண்டர் பயஸுடன் 2005-ல் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இவர்களுக்கு ஐயனா என்ற மகள் இருக்கிறார். இப்போது அவருடன் தான் வசித்து வருகிறார் ரேயா. 

ரீனா தத்தா 

பாலிவுட்டின் தயாரிப்பாளரும் நடிகையுமான ரீனா, நடிகர் அமீர்கானின் முதல் மனைவி. இவர்களுக்கு 86-ல் திருமணம் நடந்து, 2002-ல் விவாகரத்தானது. ஜுனைத் என்ற மகனும், ஐரா என்கிற மகளும் உள்ளனர். இப்போது குழந்தைகளுடன் இவர் வசித்து வருகிறார். ஆனால் அமீர்கான் கிரண் ராவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார். 

ப்ரீத்தி ஜன்ங்கியானி

 

இவர் பர்வீன் தபாஸ் என்கிற நடிகரை 2008-ல் திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் இவர்களுக்குக் குழந்தை பிறந்தவுடன் விவாகரத்தாகி விட்டது. இப்போது தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறார் ப்ரீத்தி. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close