பிரியங்கா சோப்ராவுக்கு இப்படி ஒரு நோயா? அதிர்ச்சியில் பாலிவுட்

  திஷா   | Last Modified : 21 Sep, 2018 03:59 am
priyanka-chopra-reveals-she-is-suffering-from-asthma

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. தனது அசாத்திய நடிப்பால், பாலிவுட் தாண்டி ஹாலிவுட்டிலும் கால் பதித்து வெற்றிப் பெற்றவர். மேரி கோம் போன்ற படங்களுக்காக அதிக மெனக்கெட்டுடன் நடித்தார். 

இவருக்கு அமெரிக்கப் பாடகரான நிக் ஜோனஸுடன் காதல் மலர்ந்தது. சமீபத்தில் இவர்களின் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துள்ளது. 

இந்நிலையில் தற்போது அவர் கலந்துக் கொண்ட ஒரு நேர்க்காணலில் அவரின் ஆஸ்துமா பாதிப்பு குறித்து கூறியிருக்கிறார். "என்னைப்பற்றி நன்றாக தெரிந்தவர்களுக்கு நான் ஆஸ்துமா பாதிப்புடையவள் என்பது தெரியும். இதை ஏன் மறைக்க வேண்டும்? அதனால் தான் வெளிப்படையாகப் பேசுகிறேன். ஆஸ்துமா என்னை அதன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு செல்வதற்கு முன், நான் ஆஸ்துமாவை என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டேன், அதுதான் எனது வெற்றி. 

எப்போதும் என் கையில் ஒரு இன்ஹெலர் இருக்கும். அது இருக்கும் வரை எனது லட்சியத்தையோ, வாழ்க்கையையோ, சாதனைகளையோ தடுத்து நிறுத்த முடியாது" என்றிருக்கிறார். 

ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சார முகாம்களில் பிரியங்கா பங்கேற்று வருவது குறிப்பிடத் தக்கது. 
 
newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close