பாலியல் தொல்லை கொடுத்த 'காலா' வில்லன்: பாலிவுட் நடிகை பகீர்குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 27 Sep, 2018 03:39 am
bollywood-actress-accuses-nana-patekar-of-sexual-harassment

இந்திய சினிமாவின் ஜாம்பவன்களுள் ஒருவரான  நானா படேகர் தன்னை 10 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல்  ரீதியாக துன்புறுத்தியதாக பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா குற்றம் சாட்டியுள்ளார்.

பாலிவுட்டில் பிரபல நடிகையான தனுஸ்ரீ தத்தா, 2004ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்றவர். தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் விஷாலுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கு இவர் அளித்த பேட்டியில், இந்திய சினிமாவின் மிகப்பெரிய நடிகர்களுள் ஒருவரான நானா படேகர், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன், "ஹார்ன் ஓகே ப்ளீஸ்" என்ற படத்தின் ஷூட்டிங்கின் போது, தன்னிடம் அவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக தனுஸ்ரீ தெரிவித்துள்ளார்.

"அவர் பொதுவாகவே பெண்களை மதிக்காதவர். பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் பழக்கம் கொண்டவர். நடிகைகளை அடித்துள்ளார். இப்படிப்பட்டவரை பற்றி எந்த  செய்தியும் இதுவரை வந்ததில்லை. 10 ஆண்டுகளுக்கு முன் நான் குற்றம் சாட்டிய போதும் யாரும் என்னை நம்பவில்லை" என கூறினார். தற்போது ஹாலிவுட் துவங்கி உலகம் முழுவதும் பாலியல் துன்புறுத்தல் பற்றி பெண்கள் வெளிப்படையாக பேசிவரும் நிலையில், இந்த உண்மையை நினைவு கூறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

தனுஸ்ரீயின் குற்றச்சாட்டுகளை படத்தின் நடன பயிற்சியாளர் கணேஷ் ஆச்சாரியா மறுத்துள்ளார். ஆனால், அந்த சமயம் படப்பிடிப்பில் தான் இருந்ததாகவும், தனுஸ்ரீ கூறுவது உண்மை என்றும் பத்திரிகையாளர் ஜேனிஸ் சிகுவேரா சாட்சி கூறியுள்ளார். இந்த சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close