தனுஸ்ரீ தத்தாவிற்கு ராஜ் தாக்கரே கட்சி மிரட்டல்!

  Newstm Desk   | Last Modified : 02 Oct, 2018 10:48 pm
mns-is-threatening-me-tanushree-dutta

பிரபல நடிகர் நானா படேகர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை தனுஸ்ரீ தத்தாவிற்கு, ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா கட்சியில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 

2008ம் ஆண்டு 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, தன்னிடம் நடிகர் நானா படேகர் தகாத முறையில் நடந்து கொண்டதாக 'தீராத விளையாட்டு பிள்ளை' நடிகை தனுஸ்ரீ தத்தா குற்றம் சாட்டினார்.  அப்போதே இதுகுறித்து  புகார் அளித்ததாக தத்தா கூறினார். இந்த சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரைத்துறையில் தங்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களைப் பற்றி ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை பல நடிகைகள் தைரியமாக வெளியே சொல்லி வரும் வேளையில், தனுஸ்ரீ தத்தாவிற்கு நடிகர், நடிகைகள் மத்தியில் ஆதரவு பெருகியது. 

இந்நிலையில், ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மன்  சேனா கட்சியினர் தனக்கு மிரட்டல் விடுத்ததாக தனுஸ்ரீ தற்போது தெரிவித்துள்ளார். "எம்.என்.எஸ் கட்சி ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், எனக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். நானா படேகர் தரப்பில் இருந்தும் எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது" என்றார் தனுஸ்ரீ.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close