பாலிவுட் நடிகர் திலீப் குமார் மருத்துவமனையில் அனுமதி!

  திஷா   | Last Modified : 08 Oct, 2018 03:44 pm
dilip-kumar-hospitalised

கடந்த 1940-ல் தொடங்கி 2000-ன் முற்பகுதி வரை இடைவிடாது நடித்துக் கொண்டிருந்தவர் பாலிவுட் நடிகர் திலீப் குமார். நடிப்பு மட்டுமில்லாமல், தயாரிப்பு, திரைக்கதை எழுத்து, என இந்தித் திரையுலகில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்திக் கொண்டவர். 

2000 முதல் 2006 வரை ராஜ்யசபா உறுப்பினராகவும் பதவி வகித்தவர். 

இந்திய சினிமாவுக்கு இவரது சேவையைப் பாராட்டி 2015-ம் ஆண்டு 'பத்மவிபூஷன்' விருதை அளித்து இந்திய அரசு இவரை பெருமைப் படுத்தியுள்ளது. இதேபோல் பாகிஸ்தானின் உயரிய விருதான 'நிஸான் ஈ இம்தியாஸ்' என்ற விருதை பாகிஸ்தான் அரசு 1998-ல் வழங்கி இவரை சிறப்பித்துள்ளது. 

95 வயதாகும் நடிகர் திலீப் குமாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, தற்போது மும்பை லீலாவகி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.  இது தொடர்பாக இவரது ட்விட்டரில் பதிவொன்று வெளியிடப் பட்டுள்ளது. அதில் "நேற்றிரவு மருத்துவமனையில் திலீப் குமார் அனுமதிக்கப் பட்ட செய்தியை உங்கள் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறோம். ரிக்கரண்ட் நிமோனியாவிற்கு (ஒரு வருடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகளில் நிமோனியா பாதிப்புக்குள்ளாவது) சிகிச்சையளிக்கப் பட்டு வருகிறது. பிரார்த்திக்கிறோம். அனைத்தையும் ட்விட்டரில் அப்டேட் செய்கிறோம்" என திலீப் குமார் சார்பாக ஃபைசல் என்பவர் பதிவிட்டிருக்கிறார். 

அவர் உடல்நிலை தேறி வர வேண்டும் என்பதே தற்போது பாலிவுட் திரையுலகினரின் எண்ணம். 
newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close