மீ டூ இந்தியாவில் நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது - டாப்ஸி

  திஷா   | Last Modified : 09 Oct, 2018 12:34 pm

taapsee-pannu-i-m-so-happy-metoo-movement-is-finally-happening-in-india

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. பிறகு ஆரம்பம், காஞ்சனா 2 என ஒரு சில வெற்றிப் படங்களில் நடித்தார். இவர் கடைசியாக தமிழில் நடித்தப் படம், 2015-ல் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய வை ராஜா வை. அதன் பிறகு தமிழில் நடிக்காமல், தனது முழு கவனத்தையும் இந்தி சினிமாவில் செலுத்தி வருகிறார். 

திரையுலகில் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப் பட்ட நடிகைகள் தற்போது அதனை வெளியுலகிற்கு தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே இது தொடர்பாக  #MeToo என்ற ஹேஸ்டேக்கில் வெளிநாட்டு பிரபலங்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு தாங்கள் ஆளாக்கப் பட்டதை தெரிவித்திருந்தார்கள். 

தற்போது இது இந்திய சினிமாவிலும், தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் நடிகை தனுஶ்ரீ தத்தா கூட நடிகர் நானா படேகர் மீது குற்றம் சாட்டினார். 

இந்நிலையில் இந்த மீ டூ இயக்கம் இந்தியாவிலும் நடப்பது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். ஒரு முன்னணி ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த அவர், "இது ஏன் இன்னும் இந்தியாவில் ஏற்படவில்லை என என்னிடம் பலர் கேட்டுள்ளனர். ஒருவழியாக இப்போது இங்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பலர் வெளிப்படையாக பேச முன் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. செய்யாமல் இருப்பதற்கு, காலம் தாழ்த்துவது எவ்வளவோ மேல்" என தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். 
 newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close