நானா படேகருக்கு மகாராஷ்டிரா மகளீர் கமிஷன் நோட்டீஸ்!

  Newstm Desk   | Last Modified : 09 Oct, 2018 07:01 pm
nana-patekar-issued-notice-by-maharashtra-women-s-commission

நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், நடிகர் நானா  படேகருக்கு மகாராஷ்டிரா மகளீர் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர், 2008ம் ஆண்டு நடைபெற்ற படப்பிடிப்பின் போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த வாரம் குற்றம் சாட்டினார். இதுகுறித்து புகார் அளித்தபோது, தனது அரசியல் பலத்தை பயன்படுத்தி நானா படேகர் மிரட்டல் விடுத்ததாகவும் தனுஸ்ரீ கூறினார். இந்த குற்றச்சாட்டுகளை நானா படேகர் முற்றிலும் மறுத்துள்ளார். 

இதுதொடர்பாக, மகாராஷ்டிரா மகளீர் கமிஷனுக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார் நடிகை தனுஸ்ரீ. இதைத் தொடர்ந்து, நடிகர் நானா படேகர், நடனஆசிரியர் கணேஷ் ஆச்சார்யா ஆகியோரிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பியுள்ளது மகாராஷ்டிரா மகளீர் கமிஷன். மேலும், மகாராஷ்டிரா சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர்கள் கூட்டமைப்பிற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தனுஸ்ரீ கொடுத்த புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, என கூட்டமைப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

"இதுபோன்ற சம்பவங்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சினிமா தயாரிப்பு நிறுவனங்களும், நடிகர்கள் கூட்டமைப்பும் புதிய விதிகளை வகுக்க வேண்டும். சமீப காலமாக பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், நடவடிக்கை தேவை" என மகளீர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர் தெரிவித்துள்ளார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close