• குட்கா ஊழல் விவகாரத்தில் சென்னை, காஞ்சிபுரத்தில் சிபிஐ ரெய்டு
  • ஆர்.கே.நகர் தேர்தல் மோசடி; எஃப்.ஐ.ஆரில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் எங்கே? - உயர்நீதிமன்றம் கேள்வி
  • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • திருச்சி முக்கொம்பில் புதிய அணை கட்டுவதற்கான அரசாணை வெளியீடு
  • மத்திய பிரதேசத்தில் விவசாய கடன் தள்ளுபடி!

பாலியல் குற்றச்சாட்டு: அக்ஷய் குமாரால் கழட்டிவிடப்பட்ட நானா படேகர்

  Padmapriya   | Last Modified : 13 Oct, 2018 08:43 am

facing-sexual-harassment-allegations-nana-patekar-steps-out-of-housefull-4-report

பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை அடுத்து படப்பிடிப்புத் தொடங்க இருந்த 'ஹவுஸ் ஃபுல் 4'  திரைப்படத்திலிருந்து நானா படேகர் விலகியுள்ளார். 

நடிகர் அக்ஷய் குமார் ட்வீட்டை தொடர்ந்து நானா படேகர் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

சமூக வலைத்தளங்களில் #MeToo என்ற இயக்கத்தின் எழுச்சியின் தொடர்ச்சியாக, நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா கூறிய பாலியல் அத்துமீறல்  குற்றச்சாட்டு தென் இந்திய திரையுலகை புரட்டிப் போட்டது. இதனைத் தொடர்ந்து பல முக்கிய நட்சத்திரங்கள் இது போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கி வருகின்றனர். பல பெண்களும் தங்களை பயன்படுத்தியர்களை அம்பலப்படுத்தி வருகின்றனர். 

'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற படப்பிடிப்பின் போது நானா படேகர், தனது ஆட்களை அழைத்து வந்து ரகளையில் ஈடுபட்டு தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றம்சாட்டினார். அதோடு அந்தப்படத்தின் இயக்குனர், நடன இயக்குனர் உள்ளிட்டோர் மீது தனுஸ்ரீ தத்தா குற்றச்சாட்டை வைத்து வழக்குத் தொடர்ந்துள்ளார். அவர்களும் இதற்கு துணையாக இருந்ததாகவும் அப்போது தான் இதை பேசி இருந்தால் பாலிவுட் தன்னை தூக்கி வீசி இருக்கும் என்றும் கூறினார். 

இதனிடையே அக்ஷய் குமார், நானா படேகர் உள்ளிட்டோர் நடித்து இயக்குனர் சஜித் கான் இயக்க 'ஹவுஸ் ஃபுல் 4' ஒப்பந்தமானது.  இந்த நிலையில், படத்தின் நடிகர் அக்ஷய் குமார் தான் இந்தப் படத்திலிருந்து விலகுவதாகவும், மிகவும் மனவருத்தத்தை ஏற்படித்தியுள்ள இந்தக் விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் வரை பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளனர்கள் மீது தான் நடிக்க ஒப்புக்கொள்ள போவதில்லை என ட்வீட் செய்தார்.

 

— Akshay Kumar (@akshaykumar) October 12, 2018

 

 

அக்ஷய் குமார் இவ்வாறு ட்வீட் செய்ததை அடுத்து தனுஸ்ரீயால் குற்றம்சாட்டப்பட்ட நானா படேகர் 'ஹவுஸ்புல் 4' படத்தில் இருந்து விலகி விட்டதாக படக் குழு தகவல் வெளியிட்டுள்ளது. 

சமீபத்தில் இந்தப் படத்தின் இயக்குநர் சஜித் கான் மீதும் இரு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரையும் மாற்ற பேசப்பட்டு வருகிறதாம். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.