அனுபம் கேருக்கு பிரபல எம்.ஐ.டி கல்லூரி விருது!

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2018 04:56 pm
anupam-kher-honoured-by-mit

சுமார் 5000 படங்களுக்கும் மேல் நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கேருக்கு, அமெரிக்காவின் பிரபல எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தின் ஸ்லோன் நிர்வாக கல்லூரி, சிறப்பு விருது வழங்கி கௌரவித்துள்ளது. 

பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கேர், 500 படங்களுக்கும் மேல் நடித்து புகழ்பெற்றவர். பாலிவுட் வரலாற்றிலேயே சிறந்த நடிகர்களுள் ஒருவராக  போற்றப்படும் இவர், தற்போது ஹாலிவுட் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள பிரபல மாசாச்சூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (MIT) பல்கலைக்கழகத்தின் நிர்வாக கல்லூரியில் விருது வழங்கப்பட்டுள்ளது. 

'இந்தியா க்ளோபல் உச்சிமாநாடு' என்ற பெயரில் அங்கு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், சர்வதேச பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு குறித்து பேச அனுபம் கேர் சென்றிருந்தார். அப்போது அவருக்கு, 'டிஸ்டிங்விஷ்ட் ஃபெல்லோ' என்ற விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்த கேர், "கேம்பிரிட்ஜ் எம்.ஐ.டி கல்லூரிக்கு நன்றி. இந்த விருது எனது நாட்டின் மீதான எனது பொறுப்புணர்வை அதிகரித்துள்ளது. ஷிம்லாவில் உள்ள ஒரு நடுத்தர காஷ்மீரி குடும்பத்தில் இருந்து வெகு தூரம் வந்துவிட்டேன்" என எழுதினார். 

இந்திய தொலைக்காட்சி மற்றும் திரைப்பட கல்லூரியின் (FTII) தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் அனுபம் கேர் விலகியது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close