'ஒழுங்கா நடந்துக்கணும்': பிரியங்கா சோப்ராவுக்கு வருங்கால மாமியார் அட்வைஸ்

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2018 09:06 pm
be-good-future-mother-in-law-advises-priyanka-chopra

திருமணத்துக்கு முன் தனது நண்பர்களுடன் பேச்சலரட் பார்ட்டிக்கு தயாராகி வரும் ப்ரியங்கா சோப்ராவிடம், 'ஒழுங்கா நடந்துக்கணும்' என அவரது வருங்கால மாமியார் டெனிஸ் மில்லர்-ஜோனஸ் செல்ல அட்வைஸ் கொடுத்துள்ளார்.

ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனாஸை, பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். அடுத்த மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், ப்ரியங்காவுக்கு அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பரிசுகள் வழங்கும் பிரைடல் ஷவர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நண்பர்களுடன் பேச்சலரட் பார்ட்டிக்கு ப்ரியங்கா தயாராகி வந்தார். நேற்று, தனது சமூக வலைத்தளத்தில், #BacheloretteVibes என்ற ஹேஷ்டேக்குடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார். 

எங்கு இந்த பார்ட்டி நடைபெறுகிறது என்ற தகவல்கள் எதுவும் இல்லை. படகில் இருந்து அவர் பகிர்ந்த புகைப்படங்களை பார்த்தால், பேச்சலரட் பார்ட்டி படகிலேயே நடைபெறும் போல தெரிகிறது. ப்ரியங்காவின் புகைப்படத்திற்கு சமூக வலைத்தளத்தில் கமெண்ட் கொடுத்த அவரது வருங்கால மாமியார், டெனிஸ் மில்லர்-ஜோனஸ், 'ஒழுங்கா நடந்துக்கணும்' (Be Good) என செல்லமாக அதட்டியுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close