• குட்கா ஊழல் விவகாரத்தில் சென்னை, காஞ்சிபுரத்தில் சிபிஐ ரெய்டு
  • ஆர்.கே.நகர் தேர்தல் மோசடி; எஃப்.ஐ.ஆரில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் எங்கே? - உயர்நீதிமன்றம் கேள்வி
  • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • திருச்சி முக்கொம்பில் புதிய அணை கட்டுவதற்கான அரசாணை வெளியீடு
  • மத்திய பிரதேசத்தில் விவசாய கடன் தள்ளுபடி!

மும்பை திரும்பிய புதுமண தம்பதி ரன்வீர்-தீபிகா

  Newstm Desk   | Last Modified : 18 Nov, 2018 03:55 pm

ranveer-babu-new-bride-deepika-padukone-returns-to-mumbai

பாலிவுட்டின் புது தம்பதியினரான தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் இத்தாலியில் திருமணம் முடித்து தற்போது மும்பைக்கு திரும்பி உள்ளனர். 

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்குக்கும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, இத்தாலியில் திருமண ஏற்பாடுகள் நடைபெற தொடங்கியது. திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 தினங்களுக்கு முன்பே மும்பையில் இருந்து இருவரும் இத்தாலி புறப்பட்டு சென்றனர். 

15ம் தேதி லேக் கோமா பகுதியில் உள்ள வில்லா டெல் பால்பியனெல்லோவில் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம் நடந்து முடிந்தது. திருணத்தை ஒட்டி லேக் கோமா பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என இருவருக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தற்போது இந்த தம்பதியினர் இன்று இந்தியா திரும்பியுள்ளனர். விமான நிலையத்தில் ரசிகர்கள் இவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இவர்கள் இருவரும் மும்பையில் அவர்களது வீட்டிற்கு வெளியே ரசிகர்களை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

வருகிற 21ம் தேதி பெங்களூருவிலும், 28ம் தேதி மும்பையிலும் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.