அமீர் கான், அமிதாப் பச்சன், கேத்ரீனா கைப் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த பாலிவுட் திரைப்படம் தக்ஸ் ஆப் ஹின்தோஸ்த்தான் சமீபத்தில் வெளியாகி படுதோல்வி அடைந்தது. படத்தின் தோல்விக்கு முழு பொறுப்பேற்பதாக அமீர் கான் தெரிவித்துள்ளார்.
யாஷ் ராஜின் பிரமாண்ட தயாரிப்பில், அமீர் கான், அமிதாப் பச்சன், கேத்ரீனா கைப் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த சரித்திர திரைப்படம் 'தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்'. மிகப்பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த படம் தீபாவளிக்கு வெளியானது. ஆனால், படம் படுதோல்வி அடைந்தது. முதல் நாள் 50 கோடி வசூல் செய்து சாதனை படம், மிகவும் மோசமாக இருப்பதாக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் சமூக வலைத்தளங்களில் வாட்டி எடுக்க, வசூல் கடும் சரிவை கண்டது. படத்தின் மொத்த வசூலும் 150 கோடியை தாண்ட வாய்ப்பில்லை என்கின்றனர்.
இந்நிலையில் படம் குறித்து பேசிய அமீர் கான், "படம் சிலருக்கு பிடித்திருக்கிறது. அவர்களுக்கு எங்களது நன்றி. ஆனால், அது சிலர் தான். பெரும்பாலானோருக்கு படம் பிடிக்கவில்லை. பெரிய பட்ஜெட் படம் என்பதால், முழு உழைப்பையும் கொடுத்திருதோம். ஆனால், எங்கோ தவறு நடந்திருக்கிறது. அதற்கு முழு பொறுப்பையும் நான் ஏற்கிறேன். எதிர்பார்ப்போடு வந்து ஏமாந்து போன ரசிகர்கள் எங்களை மன்னிக்க வேண்டும்" என பேசினார்.
newstm.in