வைரலாகும் தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர் டிரைலர்!

  Newstm Desk   | Last Modified : 28 Dec, 2018 09:08 am
the-accidental-prime-minister-trailer

தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மன்மோகன் சிங் வேடத்தில் இந்தி நடிகர் அனுபம் கெர் முழுக்க முழுக்க அவர் போலவே காட்சியளிக்கிறார். கடந்த 2004 முதல் 2014 வரை மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் அவருடைய பத்திரிகை ஆலோசகராக இருந்தவர் சஞ்சய் பாரு. இவர் மன்மோகன் சிங்குடன் பணியாற்றிய அனுபவங்களையும், அக்காலகட்டத்தில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளையும் தொகுத்து கடந்த 2014 ம் ஆண்டில் 'மன்மோகன்ஸ் மெமரீஸ்' என்ற புத்தகம் வெளியிட்டார்.

இந்த புத்தகத்தை அப்படியே அடிப்படையாகக் கொண்டு தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. புதுமுக இயக்குநர் விஜய் ரத்னாகர் இயக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் இந்தி நடிகர் அனுபம் கெர் மன்மோகன் சிங் வேடத்தில் நடித்துள்ளார். நடை, உடை, பாவனைகளில் மன்மோகன் சிங்காகவே மிக மெனக்கெட்டு நடித்து அசத்தியுள்ளார். சஞ்சய் பாரு வேடத்தில் நடிகர் அக்சய் கன்னா படம் முழுக்க வருகிறார். சோனியா காந்தி வேடத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த சூசன் பெர்னர்ட், ராகுல் காந்தியாக அர்ஜூன் மாத்தூர், பிரியங்காவாக ஆகானா நடித்துள்ளனர்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் நிகழ்ந்த பல்வேறு அரசியல் திருப்பங்கள், நிகழ்வுகள் பலவும் இத்திரைப்படத்தில் தத்ரூபமாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 11ம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது. பிரதமர் தேர்தல் நெருங்கும் வேளையில் படம் வெளியாவதால் அரசியல் கட்சிகளிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது 'தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்'.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close