சொந்த காலில் நின்று முன்னேறியவர் சோனம்: அனில் கபூர்

  Newstm Desk   | Last Modified : 02 Feb, 2019 07:15 pm
sonam-is-a-self-made-star-anil-kapoor

பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூர், தனது மகளான சோனம் கபூர், சொந்த உழைப்பில் முன்னேறியதாகவும், மிகவும் கடினமாக உழைத்து, தற்போது பெரிய இடத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் அனில் கபூர், தற்போது பாலிவுட்டில் சிறந்த நடிகைகளில் ஒருவராகத் திகழும் அவரது மகள் சோனம் அகுஜா, தனது பெயரால் மட்டும் வந்துவிடவில்லை, என்றும், கடினமான உழைப்பாலும், சொந்த திறமையாலும் முன்னேறி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

"அவர் சொந்த உழைப்பில் முன்னேறியவர். மிகக் கடினமாக உழைத்து, இப்போது அவர் இருக்கும் நிலைமைக்கு வந்துள்ளார். மற்றவர்கள் மீது அதிக அன்பும், பாசமும் வைத்திருப்பவர் சோனம். அது அவருக்கு மிகவும் இயற்கையாகவே வரும்" என்று கூறினார்.

தற்போது அனில் கபூர் மற்றும் சோனம் கபூர், விது வினோத் சோப்ரா இயக்கும் 'ஏக் லடிக்கி ஹோ தேக்கா தோ எய்ஸா லகா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close