முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சனின் கணவரும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சன், இன்று தன், 43வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
கணவருக்கு வித்தியாசமாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க விரும்பிய ஐஸ்வர்யா ராய், அபிஷேக்கின் குழந்தை பருவ புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, 'ஹேப்பி பர்த் டே மை பேபி' என வாழ்த்து பதிவிட்டுள்ளார்.
இது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மனைவியின் இந்த செயல், அபிஷேக் பச்சனை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்துள்ளது.
அபிஷேக் பச்சனின் குழந்தை பருவ, இளமை கால புகைப்படங்கள் தங்களின் பார்வைக்கும்....