அப்போது மிகவும் உடைந்து போயிருந்தேன்: சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி குறித்து ஆமிர் கான்

  Newstm Desk   | Last Modified : 23 Feb, 2019 03:38 pm
i-was-an-emotional-wreck-needed-help-from-a-doctor-aamir-khan

தொலைக்காட்சியில் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த போது அதில் பங்கேற்பவர்களின் கதைகளை கேட்டு மிகவும் உடைந்து போயிருந்ததாக பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தெரிவித்துள்ளார். 

2012ம் ஆண்டு பாலிவுட்டில் கொடி கட்டி பறக்கும் நடிகர் ஆமிர் கான், தொலைக்காட்சியில் சத்யமேவ ஜெயதே எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சமூகத்தில் நடக்கும் அவலங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்களே கலந்து கொண்டு அது குறித்து பேசும் விதத்தில் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது. 

3 சீசன்கள் மற்றும் 25 எபிசோட்கள் வரை இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி குறித்த அனுபவங்கள் குறித்து ஆமிர் கான் சமீபத்தில் பேசியிருக்கிறார். 

அவர் பேசும் போது, "இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் முடிவடைந்த பின் நான் மிகவும் அதிர்ச்சியடைந்த மனநிலையில் தான் இருந்தேன். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்வர்கள் அவர்களது கதையை கூறும் போது அதனை வெளியில் இருந்து பார்க்க எனக்க தெரியவில்லை. உதாரணத்திற்கு ஒரு முறை ஒருவர் தனது மகனை சிலர் அடித்தே கொன்றது குறித்து கூறினார். அப்போது எனது மகனுக்கு அப்படி நேர்ந்தால் நான் என்ன ஆவேன் என்று யோசித்தேன். இதில் இருந்து வெளியே வருவதற்கு மருத்துவரை அணுக வேண்டிய சூழ்நிலையும் வந்தது. 

ஆனால் இந்த நிகழ்ச்சி தான் என்னை முழு மனிதனாக மாற்றியது" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close