சன்னி லியோன் பயோபிக் படப்பிடிப்பு தளத்தில் ஒரு வருத்தமான நிகழ்வு!

  Newstm Desk   | Last Modified : 06 Apr, 2019 03:58 pm
sunny-leone-broke-down-revisiting-dark-chapters-of-her-life-for-web-series

தன் வாழ்க்கையின் மோசமானம் பகுதிகளை மீண்டும் நினைவுபடுத்திப் பார்ப்பது மிகவும் கடினம் என்று கூறியுள்ளார். மேலும், கரஞ்ஜித் கவுர் படப்பிடிப்பின் போது கண்ணீர் விட்டு அழுதுள்ளார் நடிகை சன்னி லியோன்.

அடல்ஸ் ஒன்லி படங்கள் மற்றும் போர்ன் வீடியோக்கள் மூலம் பிரபலமான நடிகை சன்னி லியோன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவருக்கென இந்தியா முழுவதும் தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்த இவர், தற்போது இந்தியாவிலும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். கோலிவுட்டில், நடிகர் ஜெய்யுடன் 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு வந்து ஆடி, தமிழக ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார்.

இவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு 'கரஞ்ஜித் கவுர்- சன்னி லியோனின் கூறப்படாத கதை' என்ற வெப் சீரிஸ் ஒவ்வொரு சீசனாக தயாராகி, ஜீ5 இணையத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த படப்பிடிப்பு சமயத்தில், படப்பிடிப்பு தளத்தில் வைத்தே அவர் சில சமயங்களில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

இதுகுறித்து அவர், IANS -க்கு அளித்த பேட்டியில், அவரது பழைய நினைவுகள், வாழ்க்கையில் தான் சந்தித்த இன்னல்கள் குறித்து பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது: நான் எனது சிறு வயதிலேயே அம்மாவை இழந்து விட்டேன். அம்மா இறந்து, ஒரு சில மாதங்களிலேயே புற்றுநோயால் அப்பாவும் இறந்து விட்டார். அடுத்த சில வருடங்களில், எனக்கு திருமணமும் நடந்தது. இதெல்லாம் கண்மூடி திறக்கும் நொடிப்பொழுதில் நடந்தது போல் எனக்கு இருந்தது. அந்த நாட்கள் எல்லாம் என் வாழ்க்கையில் மோசமான நாட்கள்.

எனது கணவர் எனது முடிவுக்கு எதுவும் குறுக்கே நிற்கமாட்டார். எல்லா விதத்திலும் எனக்கு ஆதரவாகவே இருந்து வருகிறார். ஆனால், என் வாழ்க்கையில் சில பக்கங்கள் உண்மையாகவே மோசமானவை. 

திருமணத்திற்கு பிறகே, இந்தியாவில் உள்ள தனியார் டிவியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதன்பின்னரே நான் ஒவ்வொன்றாக கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். பாலிவுட் குறித்தும் நான் தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அவற்றை நினைவுபடுத்திப் பார்ப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இந்தியாவைப் பற்றியும், இந்தியாவிலுள்ள மக்களைப் பற்றியும் புரிந்து கொள்ளவே எனக்கு நிறைய நேரம் எடுத்துக் கொண்டது.

ஆனால், எனக்கான சில விதிமுறைகளின்படி நான் என் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறேன். எந்த விஷயத்தையும் பொறுமையாக கையாள வேண்டும். எந்த நேரத்திலும் கோபப்படக்கூடாது, அமைதியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறேன். அப்படி இருப்பவர்களை தான், நான் எனக்கு சமமாக மதிப்பிடுவேன். 

இந்த படப்பிடிப்பின் போது, என்னையறியாமல் எனது கண்ணில் இருந்து கண்ணீர் வருகிறது. வாழ்க்கையில் சந்தித்த கசப்பான சம்பவங்களை, இன்னல்களை அசைபோட்டு பார்ப்பது என்பது சுலபமான காரியம் அல்ல" என்று உருக்கமாக பேசினார். 

தொடர்ந்து அவரது குழந்தைகள் குறித்து கூறும்போது, "எனக்கு 3 குழந்தைகள் உள்ளனர். எனது மகன்கள் இருவரும் தவழும் குழந்தைகள். எனது மகள் நிஷா ஓவியத்தில் மிகவும் ஆர்வமாக உள்ளார். அவருக்காக ஒரு ஆசிரியரையும், தேர்வு செய்து அவருக்கு பயிற்சி கொடுத்து வருகிறேன். அவர் கண்டிப்பாக ஓவியராக வேண்டும் என்பது எனது விருப்பமல்ல. தற்போது அவருக்கு இதில், ஆர்வம் இருப்பதால் அவருக்கு தேவைப்படும் பயிற்சிகளை அளித்துவருகிறேன். மற்றபடி, என் குழந்தைகள் வாழ்க்கையில் என்னவாக வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்வார்கள்" என்று புன்னகையுடன் பேசி முடித்தார். 

வாழ்க்கையில் நாம் ஒருவரின் வெளித்தோற்றத்தைக் கண்டு அவரை 'இவ்வளவு தான்' என மதிப்பிடுகிறோம். ஆனால், உண்மையில் ஒவ்வொருவது வாழ்க்கையின் பின்புலத்தை ஆராய்ந்தால் தான், அவர் எவ்வளவு இன்னல்களை கடந்து இந்த நிலைமைக்கு வந்துள்ளார் என்று தெரியும் என்பதற்கு சன்னி லியோனும் எடுத்துக்காட்டு தான்...

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close