மும்பை குடிசையிலிருந்து ஒரு சூப்பர் ஸ்டார்: சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது பெற்று சாதனை

  Newstm Desk   | Last Modified : 16 May, 2019 02:54 pm
sunny-pawar-won-the-nweyork-indian-film-festival

மும்பை குடிசைப் பகுதியை சேர்ந்த, ஏழை சிறுவன் சன்னி பவார், 2019ம் ஆண்டுக்கான நியூயார்க் இந்தியன் திரைப்பட விழாவில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது பெற்று சாதனை படைத்துள்ளான். 

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கலினா குடிசைப் பகுதியை சேர்ந்த சிறுவன், சன்னி பவார், வயது 11. ஏற்கனவே ஆஸ்திரேலியாவை சேர்ந்த இயக்குனரின் கை வண்ணத்தில் உருவான, லயன் படத்தில் நடித்ததன் மூலம், சர்வதேச அளவில் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பவார், தற்போது, சிப்பா திரைப்படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளான். 

இந்நிலையில், 2019ம் ஆண்டுக்கான நியூயார்க் இந்தியன் திரைப்பட விருது வழங்கும் விழாவில், சிப்பா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பவாருக்கு, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது வழங்கப்பட்டது. இது, தனக்கு மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அளிப்பதாக கூறியுள்ள பவார், எதிர்காலத்தில், ஹாலிவுட், பாலிவுட் ஆகிய இருவகை படங்களிலும் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளான். 

தவிர, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல், மிகப் பெரிய நடிகனாக வர வேண்டும் என்பதே தனது ஆசை எனக் கூறி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளான். மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வரும் பவார், திரைத்துறையில் அடுத்தடுத்து சாதித்து வருவது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக, பவாரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close