4 பேருடன் படுக்கையை பகிர கூப்பிட்ட தமிழ் தயாரிப்பாளர்... நடிகை பகீர் வாக்குமூலம்!

  பால பாரதி   | Last Modified : 19 Jan, 2018 07:29 pm

பெங்களூரில் வளர்ந்த தமிழ் பெண் ஸ்ருதி ஹரிஹரன். கன்னடம், மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த நிபுணன் படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில், இந்தியா டுடே சார்பில் ஐதராபாத்தில் நடந்த, சினிமாவில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி பற்றிய கருத்துக் கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகை ஸ்ருதி, சினிமாவில் வாய்ப்புக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரத்தை மீண்டும் பகிரங்கப்படுத்தினார்.

சினிமாவில் வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கன்றாவியான கலாச்சாரம் கன்னடப் பட உலகத்தில் இருக்கிறது. பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பது குற்றம். ஆனால், அந்த குற்றத்தை கண்டிப்பார் யாரும் இல்லாததால் இது, சர்வ சாதாரணமாக நடக்கிறது. இப்படியொரு மோசமான அனுபவம் எனக்கும் நேர்ந்துள்ளது. சினமா சான்ஸ் தருவதாக சொல்லி பல பேர் என்னை படுக்கைக்கு அழைத்துள்ளனர். ஒரு படத்தில் நடிக்க தேர்வு செய்தால் அவரின் திறமைக்காக மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்று நடிகை ஸ்ருதி ஆதங்கப்பட்டார்.

அதில் பல்வேறு பயங்கரங்களை ஸ்ருதி ஹரிஹரன் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது... அப்போது எனக்கு 18 வயது. என்னுடைய முதல் கன்னட படத்திலேயே எனக்கு பாலியல் தொந்தரவு ஏற்பட்டது. அது எனக்கு மிகப்பெரிய வேதனையையும் வலியையும் ஏற்படுத்தியது. நான் அழுதுகொண்டிருந்தேன். இது பற்றி என்னுடைய டான்ஸ் மாஸ்டரிடம் சொன்னேன். அதற்கு அவர், இந்த பிரச்னைய உன்னால் சமாளிக்க முடியாவிட்டால் இதில் இருந்து வெளியேறிவிடு என்றார்.

"நான் நடித்த கன்னட படம் ஒன்று மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தின் தமிழ் தயாரிப்பு உரிமையை ஒரு தயாரிப்பாளர் வாங்கினார். கன்னடத்தில் நான் நடித்த அதே பாத்திரத்தில் எனக்கு வாய்ப்பு வழங்குவதாக அந்த தயாரிப்பாளர் கூறினார்.

படத்தை இன்னும் நான்கு பேர் சேர்ந்து தயாரிக்க உள்ளதாகவும், அவர்களுக்கு தேவைப்படும்போது என்னை பறிமாறிக்கொள்ள சம்மதித்தால் வாய்ப்பு தருவதாக கூறினார். உடனே, நான் என்னுடைய செருப்பை எடுத்து அவரிடம் காண்பித்தேன்" என்றார். உடனே, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கைகளைத் தட்டி ஸ்ருதியை பாராட்டினர்.

இந்த நிகழ்ச்சி திரை உலகில் மிக வேகமாக பரவியது. பல தயாரிப்பாளர்கள் அந்த தயாரிப்பாளரிடம் போன் செய்தும், நேரில் சென்றும் சம்பவத்தைப் பற்றி கேட்டுள்ளனர். என்னிடமும் நடந்த சம்பவத்தைப் பற்றி கேட்டார்கள். அவரிடம் சொன்னதை அப்படியே நான் சொன்னேன். இதனால் எனக்கு தமிழில் நல்ல வாய்ப்பு கிடைக்கவே இல்லை என்றார் ஸ்ருதி ஹரிஹரன்.

இந்த கருத்து அமர்வில் சினிமா படத் தொகுப்பாளர் பீனா பால் கலந்துகொண்டு பேசுகையில், "சினிமா உலகில் பெண்களுக்கு தொடர்ந்து சம உரிமை மறுக்கப்படுகிறது. பல திரைப்பட செட்களில் பெண்களுக்கு கழிப்பறை வசதி கூட செய்ய மறுக்கின்றனர்.

பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள் எதையும் திரைத்துறையினர் பின்பற்ற மறுக்கின்றனர். இது பற்றி யாரிடம் புகார் செய்வது? இதற்கான விடை கிடைக்கும்பட்சத்தில் எடிட்டிங், மேக்அப், காஸ்டியூம் டிசைன் என பல துறைகளில் பெண்கள் இன்னும் அதிக அளவில் நுழைவார்கள் என்றார்.

இந்த கருத்து அமர்வில் ஸ்ருதி ஹரிஹரனுடன் பிரபல நடிகை பிரனிதா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு பேசினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை இந்திய டுடே செய்திருந்தது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close