BiggBoss Day 1: முதல் நாளே, வில்லங்கத்தை கூட்டிய வில்லன் நடிகர்! #BiggBossTamil2

  Newstm Desk   | Last Modified : 18 Jun, 2018 05:25 pm

bigg-boss2-programme-first-day

‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே, திருநங்கைகளைப் பற்றி பேசி வில்லங்கத்தை கூட்டியிருக்கிறார் வில்லன் நடிகர் பொன்னம்பலம்.      

’16 பிரபலங்கள், 60 கேமராக்கள், ஒரே வீட்டில் நூறு நாட்கள், ‘நல்லவர் யார்? கெட்டவர் யார்?’ என கமல் ஹாசன், கோலிக் குண்டு கண்களை உருட்டியபடி மிரட்டிய ’பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி நேற்று கோலகலமாக துவங்கியது! ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்க போகிறார்கள்? என்கிற எதிர்பார்ப்பு, மக்களிடம் பெரும் ஆர்வத்தை தூண்டியது. 
போட்டியாளர்கள் பற்றிய விவரத்தை தொலைக்காட்சி நிர்வாகம் கடைசி வரை, பரம ரகசியமாக வைத்திருந்தால், சமூக வலைதளங்களில் அவ்வப்போது கற்பனையான பட்டியல் வெளிவந்து கொண்டே இருந்தது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் 16 போட்டியாளர்களை நேற்று இரவு அறிமுகப்படுத்தினார் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல். அதில்,’இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ நாயகி யாஷிகா ஆனந்த்,வில்லன் நடிகர் பொன்னம்பலம், நடிகர் மஹத், காமெடி நடிகர் டேனியல் அன்னி போப், ஆர்.ஜே.வைஷ்ணவி, நடிகை ஜனனி ஐயர், இசைக் கலைஞர் அனந்த் வைத்தியநாதன், பாடகி ரம்யா, நடிகர் சென்றாயன், நடிகை ரித்விகா,  நடிகை மும்தாஜ், ’தாடி’ பாலாஜி, தொகுப்பாளினி மமதி,  ’தாடி’ பலாஜி மனைவி நித்யா, கால்பந்தாட்ட வீரர் ஷாரிக் ஹாசன், நடிகை ஐஷ்வர்யா தத்தா என மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர். இதில் 17 வது போட்டியாளராக நடிகை ஓவியாவும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். கமல் ஹாசன் ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகப்படுத்தி பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பினார்! 

முதல் போட்டியாளராக யாஷிகா வந்தார். பிறகு வில்லன் நடிகர் பொன்னம்பலம், மஹத், காமெடி நடிகர் டேனியல் அன்னி போப் என ஒருவர் பின் ஒருவராக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று, ஐந்து பேரும் செட்டிலானார்கள்! அதற்குள்ளாகவே கூட்டணி அமைத்துக் கொண்டு, கும்பலாக உட்கார்ந்து அரட்டை கச்சேரியை ஆரம்பித்த அவர்கள், ஆறாவதாக வரப்போகும் போட்டியாளருக்காக காத்திருந்தனர். அப்போது, ’இப்ப நமக்குள்ள ஒரு போட்டி?’ என டேனியல் வம்பு வலையை விரிக்க, அதில் பொசுக்கென்று விழுந்தார் பொன்னம்பலம்!

 ’அடுத்து வரப்போறது ஆண் தான்னு நான் சொல்றேன்’ என டேனியல் சொல்ல, ‘இல்லை பெண் தான்!’ என மஹத் சொல்ல, அர்த்தம் புரியாமல் முழித்த யாஷிகா,’ஆணா அப்படின்னா?’ என அப்பாவியாக கேட்க, அதற்கு ‘ஆண்னா ஆம்பள, பெண்னா பொம்பள!’ என டேனியல் விளக்கம் தர, நடுவே புகுந்த வில்லன் நடிகர் பொன்னம்பலம், ’ஆணும் இல்லாம, பொண்ணும் இல்லாம ரெண்டுங்கெட்டானா வந்துட்டா?’ என வில்லங்கத்தை கூட்டினார்!

ஆணிலும் சேராமல், பெண்ணிலும் சேராமல் ரெண்டுங்கெட்டான் என திருநங்கைகளை குறிப்பிடுவார்கள்! நடிகை கஸ்தூரி, திருநங்கைகளை உதாரணம் காட்டி சொன்னது சர்ச்சையாக மாறியிருக்கும் இந்த வேளையில், ’பிக் பாஸ்’ வீட்டிற்குள் சென்ற முதல் நாளே திருநங்கைகளை  வம்புக்கு இழுத்து வில்லங்கத்தை கூட்டியிருக்கிறார் வில்லன் நடிகர் பொன்னம்பலம்! இது பார்வையாளர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது!
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.