ஓவியா - ஆரவுடன் வெளிநாட்டில் டேட்டிங்..! ’என்ன அவசரமோ’..?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 07 Jul, 2018 02:35 am
oviya-with-aarav-dating-abroad

பிக்பாஸ் பிரபலங்களான நடிகர் ஆரவுடன் ஓவியா டேட்டிங் சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. 

கடந்த பிக்பாஸ் சீசனில் நடிகை ஓவியாவுடன் நடிகர் ஆரவும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஆரவை காதலித்ததாக கூறப்பட்டது. ஆனால், ஆரவ் அவரது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், மனமுடைந்த ஓவியா நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். நிகழ்ச்சியில் தொடர்ந்த ஆரவ் ஓவியாவுக்கு மருத்துவ முத்தம் கொடுத்ததாக கமல்ஹாசனிடம் ஒப்புக்கொண்டார். 

 பின்னர், நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நான் சிங்கிள்... சந்தோஷமாக இருக்கிறேன் ‘எனக்கூறி ஆரவுடனான காதல் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். நிகழ்ச்சி முடிந்த பிறகும்  ஓவியாவுடன் நட்பாக பழகி வருவதாக ஆரவ் தொடர்ந்து கூறி வந்தார். இந்நிலையில், ஆரவ்வுடன் ஓவியா நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படம் சமீபத்தில் டிவிட்டரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப்புகைப்படம் குறித்து அவரது ரசிகர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஆரவுடன் நடிகை ஓவியா பேங்காங்கில் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. 

        பேங்காங்கில் ஓவியாவுடன் ஆரன்

ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருவது அவர்கள் காதலில் இருப்பதை நிரூபித்து வருகிறது. நான் சிங்கிளாக இருப்பதையே சந்தோஷமாக நினைக்கிறேன் என முன்பு கூறி வந்த ஓவியா, சமீபத்தில் ‘’தற்போது பணம், புகழை விட அன்பில் தான் சந்தோஷம் அதிகம்’’ என கருத்து கூறியிருந்தார். இதை நிரூபிக்கும் பொருட்டு இருவரும், பேங்காகிற்கு டேட்டிங் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அந்த புகைப்படம் லீக் ஆகி சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. 

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ள ஓவியா ரசிகர்கள், ’வேண்டாம்.. ஆரவ் வேண்டாம்..’ என கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்குள் என்ன உறவு என தெரியவில்லை. ஓவியாவுக்கு ஏன் அவசரம்? என சிலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close